Last Updated:

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் சிறப்பாக அமைந்திருப்பதாகவும், ரஜினிகாந்த் நிரந்தர தலைவர் என்றும், இந்த திரைப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டு இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

News18

ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிவிப்பு டீசரை பார்ப்பதற்காக ஈரோடு, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து இங்கு உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்.

ரஜினிகாந்த் – நெல்சன் திலீப் குமார் – அனிருத் கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. அதுவும் அந்த திரைப்படம் உலகம் முழுவதும் 650 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த சாதனையை அதற்குப் பிறகு வந்த எந்த திரைப்படங்களும் முறியடிக்க வில்லை.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசர் வீடியோவுடன் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை  தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் அந்த டீசர் திரையிடப்பட்டு வெளியானது.  குறிப்பாக சென்னையை பொருத்தவரை கமலா, ரோகிணி, வெற்றி ஆகிய திரையரங்குகளில் திரையிடப்பட்டது.  இதற்காக கமலா திரையரங்கில் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.

அதில் சென்னை மற்றும் ஈரோடு, திருச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் இங்கு வந்து, அந்த டீசரை பார்த்தனர்.  அதற்குப் பிறகு பேசிய அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் சிறப்பாக அமைந்திருப்பதாகவும், ரஜினிகாந்த் நிரந்தர தலைவர் என்றும், இந்த திரைப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க – Madha Gaja Raja Review: திரையரங்கு முழுவதும் சிரிப்பலை… பொங்கல் வின்னரா மதகஜராஜா… ரசிகர்கள் கருத்து…

அதேபோல் ஈரோடு, திருச்சியில் இருந்து வந்த ரசிகர்கள் தங்கள் ஊரில் பார்ப்பதை விட இங்கு பார்ப்பது சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.



Source link