Last Updated:
கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, கௌதம் மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தின் தலைப்பை அறிவித்துள்ளது படக்குழு.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் இதுவரை 68 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த தி கோட் திரைப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த திரைப்படம் சுமார் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அவர் எச். வினோத் இயக்கும் தனது 69 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பிரியாமணி, கௌதம் மேனன், நரைன், மமிதா பைஜூ ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடியரசு தின விழாவான இன்று படத்தின் முதல் காட்சி மற்றும் படத்தின் தலைப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தளபதி 68 படத்திற்கு ‘ஜனநாயகன்’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. பர்ஸ்ட் லுக்கில் விஜய்யின் பிரபலமான செஃபியை நினைவுகூறும் வகையில், அவர் நீல நிற சட்டையில், மக்களோடு செஃபி எடுத்தப்படி உள்ளார்.
We call him #JanaNayagan #ஜனநாயகன் ♥️#Thalapathy69FirstLook#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu @Selva_ArtDir… pic.twitter.com/t16huTvbqc
— KVN Productions (@KvnProductions) January 26, 2025
இத்திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்வதற்கு பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை டார்கெட் செய்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
January 26, 2025 11:24 AM IST