தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டு உலகளவில் பிரபலமானவர் நடிகர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் ‘தி கோட்’ படம் வெளியாகி சக்கைபோடு போட்டது. தற்போது எச். வினோத் இயக்கி வரும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். 2026ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை இலக்காக வைத்து அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி களமிறங்கியுள்ளார் விஜய். சமீபத்தில் விஜயின் தாவெக கட்சி முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. விரைவில் முழு நேர மக்கள் பணியில் ஈடுபடவுள்ள விஜய் சினிமாவில் நடிக்கும் கடைசி படம் இந்த ‘தளபதி 69’ என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

சினிமாவை விட்டு விஜய் விலகவுள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவில் நுழையவுள்ளார். தந்தையை போல மகன் ஹீரோவாக அறிமுகமாவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தாத்தாவை போல் இயக்குநராக என்ட்ரி கொடுக்கவுள்ளார் ஜேசன். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமா குறித்துப் படித்த பின் குறும்படங்கள் இயக்கினார். இயக்கம் தான் அவரது விருப்பம். லைகா தயாரிப்பில் தனது முதல் படத்தை அவர் இயக்குவதாக கடந்த வருடம் ஆகஸ்டில் ஜேசன் ஒப்பந்தம் கையெழுத்திடுவது போன்ற புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு வெளியானது. ரசிகர்கள் பலரும் அந்த அறிவிப்பால் உற்சாகமடைந்தனர்.

விளம்பரம்

ஜேசன் படத்தின் ஹீரோவுக்கான பேச்சுவார்த்தை துல்கர் சல்மான், கவின், விக்ரம் மகன் துருவ் விக்ரம், சூரி, விஜய் சேதுபதி என பலரிடம் நடந்தது. படத்தின் ஹீரோ இந்த நடிகர் தான் என்று பல தகவல்களும் வெளியான வண்ணமே இருந்தது. விஜய் மகன் சஞ்சய் லைகா தயாரிப்பில் படம் இயக்குகிறார் என்ற தகவல் மட்டும் அதிகாரபூர்வமாக வெளியானதே தவிர படத்தின் நாயகன், நாயகி யார் என்று தகவல் எதுவும் வெளியாகமலேயே இருந்தது. மேலும், சஞ்சய் இயக்கவிருக்கும் படம் கிரிக்கெட் கதையை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று ஒருபக்கம் கூறப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: 
Bigg Boss Season 8 Eviction | இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா?

அதுமட்டுமல்லாமல், ‘ராயன்’ படத்தில் நடித்த சந்தீப் கிஷன் தான் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ என்ற தகவலும் வெளியாகி இணையத்தில் வைரலானது, ஆனால் எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகாமலேயே இருந்த நிலையில், தற்போது இந்த தகவலை பிரபல நடிகர் பாவா லக்ஷ்மணன் உறுதி செய்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது, “விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன்தான் ஹீரோவாகி நடிக்கவுள்ளார்” என்று கூறியிருக்கின்றார், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

.



Source link