Last Updated:

Jayam ravi | இன்னும் நிறைய பெண் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கிருத்திகா உதயநிதி சிறந்த இயக்குநராக வருவார். அவரின் எழுத்து வித்தியாசமாக உள்ளது. அவருடன், நானும், நித்யா மேனனும் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.

News18

“ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். அதற்கு 20, 22 வருடங்கள் ஆகிவிட்டது. நான் ஆசைப்பட்டதற்காக கடவுள் எனக்கு 4 படங்களில் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்துவிட்டார்” என நடிகர் ஜெயம் ரவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஜன.7) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜெயம் ரவி கூறுகையில், “முதன்முறையாக நான் ஒரு பெண் இயக்குநருடன் பணியாற்றுகிறேன். அவர் சொன்னதை கேட்டு நடித்தபோது, என் நடிப்பில் மாற்றத்தை உணர்ந்தேன்.

இதையும் வாசிக்க: Ajith | விபத்துக்கு பின் மீண்டும் பயிற்சிக்கு தயாரான அஜித்…துபாயில் நடந்தது என்ன?

இன்னும் நிறைய பெண் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கிருத்திகா உதயநிதி சிறந்த இயக்குநராக வருவார். அவரின் எழுத்து வித்தியாசமாக உள்ளது. அவருடன், நானும், நித்யா மேனனும் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.

இந்தப் படம் சிறந்த படமாக இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். அதற்கு 20, 22 வருடங்கள் ஆகிவிட்டது. நான் ஆசைப்பட்டதற்காக கடவுள் எனக்கு ‘பொன்னியின் செல்வன் 1’, ‘பொன்னியின் செல்வன் 2’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஜீனி’ ஆகிய 4 படங்களை கொடுத்துவிட்டார். அவர் வேலைதான் பேசும். அவர் குறைவாகத்தான் பேசுவார்” என்றார்.



Source link