Last Updated:
கடந்த 1977ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு 39வது அதிபராக ஜிம்மி கார்டர் தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் தனது 100வது வயதில் காலமானார்.
ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பிளைன்ஸ் நகரில் வசித்து வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரியான ஜிம்மி கார்ட்டர், 1962ஆம் ஆண்டு ஜார்ஜியா மாகாணத்தில் இருந்து அமெரிக்க செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு அம்மாகாண ஆளுநராக ஜிம்மி கார்ட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 1977ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு 39வது அதிபராக ஜிம்மி கார்ட்டர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1977ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக ஜிம்மி கார்ட்டர் பதவி வகித்தார்.
ஜிம்மி கார்ட்டரின் சேவையை பாராட்டி கடந்த 2002ஆம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பிளைன்ஸ் நகரில் தனது குடும்பத்தினருடன் ஜிம்மி கார்ட்டர் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜிம்மி கார்ட்டர் தனது 100வது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்மி கார்ட்டரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
December 30, 2024 11:04 AM IST