கங்குவா திரைப்படம் நன்றாக உள்ளதாகவும், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இது அமையும் என நடிகர் சூரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் கே. இ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில்,
சூர்யா முன்னணி கேரக்டரில் நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
Also Read:
Kanguva Box Office | 4 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல் எவ்வளவு? – அமரன் படத்தை முந்துமா?
மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு கலவை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 11ம் நூற்றாண்டு மற்றும் தற்காலத்தில் நடக்கும் சம்பவங்களாக ‘கங்குவா’ படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த படத்தில் சூர்யாவுடன் யோகி பாபு, திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், நட்டி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Also Read:
“அரை மணி நேர Sound பிரச்னைக்கு இவ்வளவு விமர்சனமா?” நடிகை ஜோதிகா ஆதங்கம்..!!
உலகம் முழுவதும் 3டி தொழில்நுட்பத்துடன் ‘கங்குவா’ திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
கலவை விமர்சனங்கள் வெளிவந்த போதிலும் ‘கங்குவா’ திரைப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் கங்குவா திரைப்படம் இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கங்குவா படம் நன்றாக இல்லை என்பது சிலரின் கருத்து என்று கூறினார்.
நயன்தாரா தனுஷ் பிரச்சனை குறித்து கேட்டதற்கு அது தனக்கு தெரியாது என்றும், தெரிந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை என்று சூரி கூறினார்.
இதனிடையே, திரைப்பட விமர்சனம் செய்வது அவரவர் சுதந்திரம் என்றும், கல்விப் பணிக்கு வெகுகாலம் நன்மை செய்து வரும் சூர்யா சிவக்குமார் போன்றவர்களை, தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வது வருத்தம் தருவதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
திரைத்துறைக்கும் அதனை சார்ந்த ஏனைய தொழில் முனைவோர்களுக்கும் பாதுகாப்பற்ற தன்மையை இது உணர்த்துவதாக எக்ஸ் தளத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Also Read:
கங்குவா படம் உண்மையில் எப்படி இருக்கு… ஏன் இவ்வளவு கமெண்ட்.. பார்க்கலாம் வாங்க..!!
.