Last Updated:

Keerthy Suresh | இதனை சிரித்துக்கொண்டே சமாளித்த கீர்த்தி சுரேஷ், ‘நான் கீர்த்தி சுரேஷ்… கீர்த்தி தோசா அல்ல’ என கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கீர்த்தி சுரேஷ்

‘பேபி ஜான்’ படத்தின் புரமொஷனல் நிகழ்வில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷிடம், ‘கீர்த்தி தோசா’ என தென்னிந்திய உணவுகளை குறிப்பிட்டு பாலிவுட் போட்டோகிராஃபர்கள் கிண்டல் செய்தனர். இதனை சிரித்துக்கொண்டே சமாளித்த கீர்த்தி சுரேஷ், ‘நான் கீர்த்தி சுரேஷ்… கீர்த்தி தோசா அல்ல’ என கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

‘மகாநடி’ தெலுங்கு படத்துக்காக தேசிய விருது வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் ஆண்டனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். கீர்த்தியின் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தின் ரீமேக் இந்தியில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் திரையரங்குகளில் வெளியானது. வருண் தவான் நடித்த இந்தப் படத்தை அட்லீ தயாரித்தார். இந்தப் படம் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். படம் இந்தி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தின் புரமோஷனல் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ் போட்டோகிராஃபர்களுக்கு புகைப்படங்களுக்காக போஸ் கொடுத்தார். அப்போது, அவரை ‘கிர்த்தி’ என போட்டோகிராஃபர்கள் அழைத்தனர். இதனை திருத்திய அவர், ‘கிர்த்தி அல்ல, கீர்த்தி’ என்றார். அப்போது சில போட்டோகிராஃபர்கள், ‘கீர்த்தி தோசா’ என கிண்டலாக குறிப்பிட்டனர்.

அதாவது தென்னிந்தியர்களின் உணவான தோசையை மையப்படுத்தி, பெயருடன் இணைத்து அவர்கள் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. அவர்களின் இந்த கிண்டல் மொழியை சிரித்துக் கொண்டே சமாளித்த கீர்த்தி சுரேஷ், “நான் கீர்த்தி தோசா அல்ல, கீர்த்தி சுரேஷ். மேலும் எனக்கு தோசை பிடிக்கும்” என தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





Source link