Last Updated:

Keerthy Suresh | அவர் என்னை விட 7 ஆண்டுகள் மூத்தவர். நான் 12வது படித்துக்கொண்டிருந்தபோது, அவர் கத்தாரில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். 6 ஆண்டுகள் தொலைவில் இருந்தே காதலித்து வந்தோம்.

News18

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை அண்மையில் மணமுடித்தார். இந்நிலையில் தனது காதல் கதையை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில், “ஆர்குட் சமூக வலைதளம் இருக்கும்போது அதன் வழியாக முதன் முதலில் பேச ஆரம்பித்தோம். ஒரு மாதம் பேசியிருப்போம். அதன்பிறகு ரெஸ்டாரன்ட் ஒன்றில் சந்தித்தோம். அப்போது நான் என்னுடைய குடும்பத்துடன் இருந்ததால் என்னால், ஆண்டனியிடம் பேச முடியவில்லை. ஆண்டனியை பார்த்து கண்ணை மட்டும் சிமிட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

அதன்பிறகு அவரிடம்,  ‘உனக்கு தைரியம் இருந்தால் என்னிடம் புரபோஸ் செய்’ என்று கூறினேன். கடந்த 2010-ம் ஆண்டு முதன்முறையாக அவர் என்னிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். 2016-ல் தீவிரமாக இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். அவர் எனக்கு கொடுத்த மோதிரத்தை நான் இன்றுவரை கழட்டவில்லை. அது என்னுடைய திருமணத்திலும் இருந்தது. அந்த மோதிரத்தை நீங்கள் என்னுடைய அனைத்து படங்களிலும் பார்க்கமுடியும்” என்றார்.

இதையும் வாசிக்க: Pushpa 2 | ‘பாகுபலி 2’ வசூலை முறியடித்த ‘புஷ்பா 2’ – வசூலில் மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்

மேலும், “இது எங்களுக்கு ஒரு கனவு போன்றது. ஏனென்றால் வீட்டை விட்டு ஓடிப்போகலாம் என்றெல்லாம் நாங்கள் யோசித்திருக்கிறோம். இப்போது என்னுடைய மனம் நிறைந்துவிட்டது. எங்களுக்கு இது ஒரு எமோஷனலான தருணம். இதைத்தான் விரும்பினோம். அவர் என்னை விட 7 ஆண்டுகள் மூத்தவர். நான் 12வது படித்துக்கொண்டிருந்தபோது, அவர் கத்தாரில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். 6 ஆண்டுகள் தொலைவில் இருந்தே காதலித்து வந்தோம். எங்களை இணைத்தது கரோனா காலக்கட்டம் தான்.

என்னுடைய கரியருக்கு அவர் மிகவும் ஆதரவாக இருந்தார். நான் கிடைத்ததற்கு அவர் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று யாராவது சொன்னால், நம்பாதீர்கள், அவர் கிடைப்பதற்கு தான் நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்றார்.



Source link