Last Updated:
Kushboo | நான் ஒரு கேலிச்சித்திர கதாபாத்திரமாக மாறியதை அப்போதுதான் உணர்ந்தேன். டப்பிங்கின் போது, படத்தைப் பார்த்த பிறகு, நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்”
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘அண்ணாத்த’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்தனர். 2021 தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகை குஷ்பூ அளித்த பேட்டியில் இந்தப் படம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அவரிடம், ‘ஏதாவது ஒரு படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டதுண்டா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பாலிவுட்டில் சில படங்களும், தென்னிந்தியாவில் சில படங்களும் உண்டு.
ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் மீனாவும் நானும் நடித்தோம். நாங்கள் இருவரும் படத்தில் கதாநாயகிகளாக இருப்போம் என்று ஆரம்பத்தில் எங்களிடத்தில் தெரிவிக்கப்பட்டது. ரஜினி சாருக்கு ஜோடியாக வேறு யாரும் நடிக்க மாட்டார்கள் என்றும், நாங்கள் தான் படம் முழுக்க இருப்போம் என்றும் நம்பி அந்த படத்தை ஒப்புக்கொண்டேன்.
இதையும் வாசிங்க: SK25 | ‘புறநானூறு’ இல்லை… சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா படத் தலைப்பு இதுவா?
அது மிகவும் மகிழ்ச்சிகரமான, நகைச்சுவையான மற்றும் வேடிக்கையான கதாபாத்திரமாக இருந்தது. ஆனால், அந்த படம் போகப் போக ரஜினி சாருக்கு திடீரென ஒரு ஹீரோயின் ஒப்பந்தமானார்.
அதற்கென ஒரு கேரக்டர் வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்டது. நான் ஒரு கேலிச்சித்திர கதாபாத்திரமாக மாறியதை அப்போதுதான் உணர்ந்தேன். டப்பிங்கின் போது, படத்தைப் பார்த்த பிறகு, நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்” என்றார்.
January 03, 2025 9:52 AM IST