Last Updated:

Lokesh kanagaraj | அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் யாரை இருக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் அவரிடம், “அஜித்தை எப்போது இயக்க போகிறீர்கள்?” என கேட்கப்பட்டது.

News18

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினி நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்து அவர் அஜித்தை வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தை இயக்கினார். அடுத்து ரஜினியை வைத்து தற்போது ‘கூலி’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் யாரை இருக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் அவரிடம், “அஜித்தை எப்போது இயக்க போகிறீர்கள்?” என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “எல்லாரையும் போல எனக்கும் அஜித்துடன் பணியாற்ற ஆசை இருக்கிறது. விரைவில் அது நடக்கும் என நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் அஜித்தும் எல்சியுவில் வருவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





Source link