நாமக்கல் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது என்றால் கோழிப்பண்ணை மற்றும் முட்டை தான். இங்கிருந்து தான் மற்ற மாவட்டங்களுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு அடுத்ததாக பிரதானமாக இருக்கும் முக்கிய தொழில் என்றால், லாரிகளுக்கு பாடி கட்டும் தொழில் தான். இந்த தொழிலை மட்டும் நம்பி பல லட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். டன் கணக்கில் எடை கொண்ட சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய பொறுப்பு லாரிகளுக்கு இருப்பதால், லாரிக்கு பாடி கட்டும் போது எந்த வித சேதாரம் இன்றி மிகவும் வலிமையானதாக பாடி கட்டுகின்றனர் தொழிலாளர்கள். லாரிகளின் முக்கிய பயன்பாடாக இருக்கும் பாடி கட்டும் தொழில் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

விளம்பரம்

லாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது லாரி பாடி கட்டுமானம். அதிக எடையிலான பொருட்களை ஏற்றிக்கொண்டு கரடுமுரடான சாலைகளில் எல்லாம் பயணிக்கும் வகையில் லாரி பாடி கட்டுமானம் சரியான முறையில் அமையவேண்டும். இதில் சிறந்த முறையில் லாரி பாடி கட்டுமானத்தில் தரமான தரத்துடன் செய்து தருவதில் நாமக்கல் முன்னிலை இருக்கிறது என்றே சொல்லலாம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் லாரி கட்டுமானத் தொழில் பெரிதளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஏராளமான லாரி பாடி கட்டும் பட்டறைகள் இயங்கி வருகின்றன. பிற மாநிலங்களில் லாரி பாடி கட்டுமானம் செய்தாலும் நேர்த்தியாகவும், தரமான முறையிலும் நாமக்கல்லில் தான் லாரிக்கு பாடி கட்டப்படுகிறது. ஒரு லாரிக்கு பாடி கட்ட குறைந்தது 5 முதல் 6 லட்ச ரூபாய் செலவாகும் என கூறப்படுகிறது.

விளம்பரம்

இதிலும், இரும்பு பொருட்கள் மற்றும் மரப்பொருட்கள் விலைகள் பொருத்து மாறுபடும். மேலும் தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளமாக 800 முதல் 900 வரையில் வழங்கப்படுகிறது. மேலும் இது வேலை மற்றும் வேலைசெய்யும் நேரம் மாறுபடும் என தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஒரு லாரியை முழுமையாக பாடி கட்டி, பெயின்டிங் என அனைத்து வேலைகளும் செய்து முடிக்க 20 நாட்கள் ஆகும் என்றும், கிட்டத்தட்ட 15-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

லாரி பாடி கட்டுமானம் என்பது பெயின்டிங், எலக்ட்ரிக்கல், வெல்டிங் என அனைத்தையும் உள்ளடக்கியது. இதனால் லாரி பாடி கட்டுமானத் தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் நம்பி இருக்கின்றன. அந்த வகையில் நாமக்கல்லின் அடையாளமாக இருக்கும் லாரி பாடி பில்டிங் தொழிலை வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும் கற்று கொள்ள வேண்டும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.



Source link