Last Updated:

POCO | போகோ நிறுவனம் இந்தியாவில் வரும் டிசம்பர் 17 அன்று M7 Pro 5G மற்றும் C75 5G ஆகிய இரண்டு 5ஜி மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது

News18

போகோ நிறுவனம் இந்தியாவில் வரும் டிசம்பர் 17 அன்று M7 Pro 5G மற்றும் C75 5G ஆகிய இரண்டு 5ஜி மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மொபைல்களின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே Xiaomi-யின் துணை பிராண்டான போகோ வரவிருக்கும் இந்த 2 ஸ்மார்ட் ஃபோன்களின் கேமரா மற்றும் டிஸ்ப்ளே உட்பட பல ஸ்பெசிஃபிகேஷன்கள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தி உள்ளது. இதில் Poco M7 Pro 5G மொபைலானது சோனி சென்சார் கொண்ட 50MP பிரைமரி கேமராவுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரம் Poco C75 5G ஆனது சியோமியின் HyperOS-ல் இயங்கும் நிறுவனத்தின் C சீரிஸில் முதல் மொபைலாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

போகோவின் M75 Pro 5G, Poco C75 5G மொபைல்களின் உறுதிப்படுத்தப்பட்ட ஸ்பெசிஃபிகேஷன்கள்

பிரபல மைக்ரோ பிளாகிங் பிளாட்ஃபார்மான X-ல், , Poco India நிறுவனம் அதன் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளது. நிறுவனத்தின் வெளிப்படுத்தி இருக்கும் தகவலின்படி Poco M7 Pro 5G மொபைலானது 6.67-இன்ச் ஃபுல் HD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,100 nits பீக் பிரைட்னஸ்கொண்டதாக இருக்கும். மேலும் இந்த மொபைல் TUV டிரிபிள் சான்றிதழ் மற்றும் SGS ஐ கேர் டிஸ்ப்ளே சான்றிதழ் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. இது 92.02% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோவை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேமராவை பொறுத்த வரை இதில் டூயட் ரியர் கேமரா சிஸ்டம் இருக்கும். இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், மல்டி-ஃபிரேம் நாய்ஸ் ரிடக்ஷன் மற்றும் ஃபோர் -இன்-ஒன் பிக்சல் பின்னிங் ஆகியவற்றுடன் கூடிய 50MP Sony LYT-600 கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இது சூப்பர் ரெசல்யூஷன் தொழில்நுட்பத்துடன் இன்-சென்சார் ஜூம்-உடன் வரும். வரவிருக்கும் மொபைலில் கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற அம்சங்களில் 300% சூப்பர் வால்யூம், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் , டால்பி அட்மாஸ் சப்போர்ட், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொட்டக்ஷன் மற்றும் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் ஆகியவை அடங்கும்.

Also Read : எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்க இந்திய மக்கள் யோசிப்பது ஏன்?

இதற்கிடையே டிசம்பர் 17-ல் அறிமுகமாகவுள்ள Poco C75-ன் 5G வேரியன்ட் அதன் ஹைப்பர்ஓஎஸ் பிளாட்ஃபார்மில் இயங்கும் சீரிஸில் முதல் மொபைலாக இருக்கும், அதே நேரத்தில் ரூ.9,000-க்கும் குறைவான விலையில் இருக்கும் என்பதையும் நிறுவனம் எடுத்துக்காட்டுகிறது. மேலும் இதில் ஒரு சோனி சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் வரவிருக்கும் இந்த மொபைல் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 சிப்செட்டை கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 8ஜிபி வரையிலான ரேம் (4ஜிபி டர்போ ரேம் உட்பட) மற்றும் 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜை கொண்டிருக்கும். இந்த மொபைலுக்கு 2 வருட OS மற்றும் 4 வருட பாதுகாப்பு அப்டேட்ஸ் கிடைக்கும் என்று Poco கூறுகிறது. இதிலிருக்கும் மற்ற அம்சங்களில் tap gestures உடன் கூடிய சைட் மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார்,டூயல் சிம் சப்போர்ட் மற்றும் MIUI டயலர் ஆகியவை அடங்கும்.



Source link