Last Updated:

Madha Gaja Raja Review: நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தானத்தை இப்படிப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

X

திரையரங்கு

திரையரங்கு முழுவதும் சிரிப்பலை… பொங்கல் வின்னரா மதகஜராஜா… ரசிகர்கள் கருத்து…

இயக்குநர் சுந்தர் சி,விஷால் கூட்டணியில் உருவான மதகஜராஜா திரைப்படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுந்தர் சி,விஷால் கூட்டணியில் 2013ஆம் ஆண்டே வெளியீட்டுக்குத் தயாராக இருந்த இத்திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து தற்போது திரைக்கு வந்துள்ளது.

இந்த படத்தை பற்றி ரசிகர்கள் கூறும்போது ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல காமெடி திரைப்படத்தைத் திரையில் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஒன்மேன் ஆர்மியாக நடிகர் சந்தானம் தன் கவுன்டர் நகைச்சுவையால் ரசிகர்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பது நன்றாக உள்ளது.

மேலும், முதல்பாதி பொறுமையாகச் சென்றாலும் இரண்டாம் பாதி முழுக்க திரையரங்கமே சிரிப்புச் சத்தத்திலேயே இருக்கிறது. தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹிட் இயக்குநர்கள் எனப் பெயரெடுத்த பலரும் தோல்விப்படங்களைக் கொடுக்கும் சூழலில், சுந்தர்.சி தனது தனித்துவப் படங்களால் இன்றும் கமெர்ஷியலில் ஹிட் கொடுத்து வருகிறார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: Virudhunagar Food Festival: விருதுநகர் மக்களே ஒரு புடி புடிக்க ரெடியா… மீண்டும் வருது உணவுத் திருவிழா…

மேலும், கிளைமேக்ஸில் விஷால் கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் வைத்திருந்திருக்கிறார்.வின்டேஜ் விஷால் பார்க்க முடிந்தது. நடிகைகள் அஞ்சலியும் வரலட்சுமியும் நன்றாக நடித்து உள்ளனர். குறிப்பாக நடிகர் சந்தானம் தொடர்ந்து நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்காதது தமிழ் சினிமாவுக்கு இழப்புதான் என்பதை இப்படத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறது.

சந்தானத்தின் இடத்தை எந்த நடிகராலும் நிரப்ப முடியாது என்றும் விஜய் ஆண்டனியின் இசை படத்திற்குப் பக்க பலம் என்றும், இந்த பொங்கலுக்குக் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link