Last Updated:
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். அவரின் ‘இஷ்க்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாகும் ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். அவரின் ‘இஷ்க்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது அவர் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். ‘மெட்ராஸ்காரன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை ஜெகதீஸ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது முடிந்தது. இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்ததையடுத்து படத்தின் ரிலீஸ்தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
January 01, 2025 4:46 PM IST