Last Updated:
Mammootty | காமெடி கலந்த துப்பறியும் கதையாக இந்தப் படம் உருவாகியிருப்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ‘டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ மலையாள படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், லீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கடந்த டிசம்பரில் டீஸர் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டிரெய்லரைப் பொறுத்தவரை மம்மூட்டி துப்பறிவாளராக பணியாற்றி வருகிறார். துப்பறிவாளரான அவரிடம் அடையாளம் தெரியாத ஒரு பர்ஸ் குறித்து கண்டறிய கோரி ஒருவர் கோரிக்கை விடுக்கிறார். இது தொடர்பான விசாரணையில் இறங்கும் அவருக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது.
இது இறுதியில் கொலை வரை செல்லும் என தெரிகிறது. காமெடி கலந்த துப்பறியும் கதையாக இந்தப் படம் உருவாகியிருப்பதை டிரெய்லர் உணர்த்துகிறது. மற்ற முன்னணி நடிகர்கள் யாருமில்லாமல், மம்மூட்டியையும், காமெடியையும் மட்டுமே நம்பி படம் உருவாகியுள்ளதை காட்சிகள் உறுதிபடுத்துகின்றன. படம் வரும் ஜனவரி 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
January 09, 2025 6:45 AM IST