Last Updated:
Mohanlal | ஒரு நடிகருக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைப்பது பாக்கியம். அப்படியான கதாபாத்திரங்களும், கதைகளும் எங்களுக்கு அமைந்தன. எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதத்தால் நல்ல கதைகளும், நல்ல இயக்குநர்களும் எங்களுக்கு கிடைத்தன.
மலையாள நடிகர் மோகன்லால் இத்தனை ஆண்டுகாலம் நிலைத்த நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகராக இருப்பதன் ரகசியம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இன்றைய தலைமுறைக்கு நட்சத்திர அந்தஸ்தை (Stardom) பெற்று தருவதில் சமூக வலைதளங்களின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் சமூக வலைதளங்களின் வீச்சு பெரிய அளவில் இல்லாத காலக்கட்டத்தில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்கள் ‘ஸ்டார்’களாக ஜொலித்தனர்.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மோகன்லால், “இதற்கெல்லாம் காரணம் சிறந்த படங்களில் எங்களுக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் தான். சில சிறந்த இயக்குநர்களுடன் பணியாற்றவும், அவர்கள் வடிவமைத்த சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்கவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
Also Read: Pushpa 2 | ‘பாகுபலி 2’ வசூலை முறியடித்த ‘புஷ்பா 2’ – வசூலில் மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்
ஒரு நடிகருக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைப்பது பாக்கியம். அப்படியான கதாபாத்திரங்களும், கதைகளும் எங்களுக்கு அமைந்தன. எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதத்தால் நல்ல கதைகளும், நல்ல இயக்குநர்களும் எங்களுக்கு கிடைத்தன.
இந்த தலைமுறைக்கும் அப்படியான கதைகளும், படங்களும் அமையும். இப்போது இருப்பவர்கள் தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்கிறார்கள். நான் நட்சத்திர அந்தஸ்தை பெரிதாக நம்புவதில்லை. நல்ல நடிகர்களை நம்புகிறேன். ஒரு படம் ஹிட் அடிக்கும்போது நட்சத்திர அந்தஸ்து கொண்ட நாயகன் உருவாகிறான். ஆனால், சிறந்த நடிகராக பரிணமிக்க அதையும் தாண்டிய சில விஷயங்கள் தேவை” என்றார்.
January 02, 2025 9:53 AM IST