Last Updated:
Mysskin | பாட்டல் ராதா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மிஸ்கின், “பலர் மது அருந்த இசையமைப்பாளர் இளையராஜாதான் காரணம் என கூறியது சர்ச்சையாகியுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான படத்தின் இசைவெளியிட்டு நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் ஆபாசமாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தான் யார் என்பதை பொதுவெளியில் ஒருவர் ஒப்புவித்தால் எப்படி இருக்குமோ.. அப்படித்தான் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கினும் பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், தமிழ் சினிமாவில் அதிகம் மது குடிப்பது தாம் தான் என்றும், தனக்கு சாராயம் காய்ச்சவும் தெரியும் என கூறி சலசலப்பை கூட்டினார்.
சிறு வயதில் வீட்டில் திருட முயன்று மாட்டிக்கொண்டதாக கூறிய மிஷ்கின், கல்லூரியில் படிக்கும் போது, ஒரே பாடலை 3 ஆண்டுகளும் பாடி பரிசு பெற்றதாகவும், 2 மற்றும் 3ஆம் ஆண்டு விழாவில் மது அருந்திவிட்டு பாடியதாக கூறினார்.
மதுவுக்கு பலர் அடிமையாவது போன்று, சமூக வலைத்தளங்களுக்கும், கிரிக்கெட்டுக்கும், திரைப்படத்தின் முதல் காட்சிக்கும், நடிகர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் பலர் அடிமையாகி இருப்பதாக கூறிய மிஸ்கின் பெண்களையும் விமர்சனம் செய்தார்.
இளையராஜாவின் இசைக்கு பலர் அடிமை எனக் குறிப்பிட்ட மிஷ்கின், பலர் மது அருந்துவதற்கு இளையராஜாவும் காரணம் என்றார்.
கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது பேசிய மிஷ்கின் அந்த படத்தை மக்கள் பார்க்கவில்லை என்றால் தாம் நிர்வாணமாக நிற்பேன் என்றது சர்ச்சையானது. தற்போது, பாட்டல் ராதா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்விலும் அதே பாணியில் பேசியுள்ளார்.
இதையும் படிங்க : ரூ.5 கோடி கேட்ட மிஷ்கின்…ஓடிய இயக்குநர்… விஜய் சேதுபதி படத்தில் நடந்தது என்ன?
மேலும், பெண்கள் முகம் சுளிக்கும் அளவிற்கான வார்த்தைகளை மேடையில் பெண்களை வைத்துக்கொண்டே மிஷ்கின் பேசியிருப்பதும் ஒரு படத்துக்கு விளம்பரம் தேடவேண்டும் என்கிற ரீதியில் பேசுகிறார்களா என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
January 19, 2025 8:16 AM IST