Last Updated:

Mysskin | இயக்குநர் மிஷ்கின், சர்ச்சை பேச்சு விவகாரத்தில் பாடலாசிரியர் தாமரையிடம் மன்னிப்பு கோரியுள்ளார். யாரையும் தாக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறினார்.

Mysskin

சர்ச்சை பேச்சு விவகாரத்தில் இயக்குநர் மிஷ்கின் மன்னிப்பு கோரியுள்ளார். தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கும் எண்ணத்தில் தான் பேசவில்லை என்றும், மன்னிப்பு கேட்பதற்கு ஒருபோதும் தயங்கியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ‘பாட்டல் ராதா’ பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு பாடலாசிரியர் தாமரை உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், தான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

பாடலாசிரியர் தாமரையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக மிஷ்கின் கூறினார். வெற்றி தன்னை இப்படி பேச வைத்து விட்டதாக பாடலாசிரியர் தாமரை கூறியதை சுட்டிக் காட்டிய மிஷ்கின், 18 ஆண்டுகளாக சினிமாவில் போராடி வருவதாகவும், வெற்றி தன் மேல் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு பெரிய நடிகர்களுடன் தான் படம் பண்ணியிருக்க வேண்டும் என்றார்.

ஒரு நகைச்சுவையாக தான் பேச ஆரம்பித்தது, தன்னை மீறி நடந்து விட்டதாக மிஷ்கின் கூறினார்.

Also Read | பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த அங்கீகாரம்.. அஜித், ஷோபனா போல் விஜய் பட நடிகருக்கும் பத்ம விருது அறிவிப்பு!

தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கும் எண்ணத்தில் பேசவில்லை என்றும், மன்னிப்பு கேட்பதற்கு ஒருபோதும் தயங்கியது இல்லை என்றும் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தார்.

உங்கள் முன் மண்டியிட்டு மன்னிப்புக்கேட்டு உங்கள் எல்லோரையும் கடவுளாக்குகிறேன் என்றும் தெரிவித்தார்.



Source link