தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா 2011ல் சினிமாவில் இருந்து விலகியது ஏன், அதற்கான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார். தனது திருமண ஆவணப்படத்தில் இதுகுறித்து விரிவாக பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

Also Read: 
நயன்தாரா நடிப்பில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படங்கள்.. எந்தெந்த OTT-யில் பார்க்கலாம்? முழு விவரம்!

சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் முக்கியமான திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருமண நிகழ்வுடன் சேர்த்து, நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை, “Nayanthara: Beyond the Fairytale” என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியாகியுள்ளது.

விளம்பரம்

ஆவணப்படத்தில் நயன்தாரா பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அப்படி பேசிய ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது. அது சினிமாவில் இருந்து விலகியது பற்றியது. 2011ல் பாலகிருஷ்ணாவுடன் “ஸ்ரீ ராம ராஜ்யம்” படத்தில் நடித்த பிறகு சினிமாவில் விலகுவதாக அறிவித்தார்.

திருமணம் செய்யவிருந்ததால், நயன்தாரா சினிமாவில் விலகுவதாக சொல்லப்பட்டது. தற்போது இதுதொடர்பாக தனது ஆவணப்படத்தில் பேசியுள்ள அவர், ““ஸ்ரீ ராம ராஜ்யம்” படத்தில் கடைசி ஷாட் எடுக்கும்போது எனக்கு ஒருமாதிரி இருந்தது. எனக்கே தெரியாமல் அப்போது அழுதேன்.

விளம்பரம்

எனக்கு சினிமாதான் எல்லாமே, நான் மிகவும் விரும்பியதும் இதுதான். அப்படியான சினிமாவை விட்டுக்கொடுப்பது என்பது முடியாதது. ஆனால், நான் திரைத்துறையை வெளியேறியதற்கு காரணம், அந்த நபர் (திருமணம் செய்யவிருந்தவர்) என்னை சினிமாவில் விலக சொன்னதுதான்.

சினிமாவிலிருந்து விலக வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அல்ல. அது எனக்கு ஒரு ஆப்ஷனாக கூட கொடுக்கப்படவில்லை. ஒரே வார்த்தையில் இனி சினிமாவில் வேலை செய்யக்கூடாது என அந்த நபர் சொல்லிவிட்டார். எனக்கு வேறு வழியே இல்லை.

விளம்பரம்

வாழ்க்கையை பற்றி புரிந்துகொள்ள அப்போது எனக்கு முதிர்ச்சி இல்லை. நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள நாம் ஒரு வேதனையான சூழலில் இருக்க வேண்டும். அப்போது வாழ்க்கை புரியும்.

அப்படியான வலிதான் என்னை காயப்படுத்தியது. அப்போது எனக்கென ஒரு நாள் வரும் என்றும், அன்றைக்கு பிரச்சனை நான் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியவரும் என யோசித்தேன்.

தவறு செய்வது சகஜம்தான். தவறை நினைத்து வருத்தப்படுவதும் சரியானதுதான். வாழ்க்கையில் இந்த காலகட்டத்தில் இந்த நபரை நம்பாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கையில் இன்னும் சில வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியும்.

விளம்பரம்

இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான். வாழ்க்கையே போய்விட்டது என்று இடிந்துபோய் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால், அதுவே நமது வரலாறாக மாறிவிடும்.

Also Read | Nayanthara | “நான் ஒருத்தி மட்டும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேனா?” – முந்தைய காதல் குறித்து மனம்திறந்த நயன்தாரா!

அல்லது கீழே விழுந்தாலும் எழுந்து நிற்க வேண்டும். யாரெல்லாம் உங்களை மோசமாக நடத்தினார்களோ, ஒவ்வொரு நாளும் அவர்கள் உங்களை பார்த்து உங்களுக்கு செய்த மோசமான விஷயங்களை பார்த்து வருத்தப்படும் அளவுக்கு, அவர்கள் வேதனைப்படும் அளவுக்கு எழுந்து நிற்க வேண்டும்.

விளம்பரம்

எல்லோரும் எனது கதை முடிந்தது, நான் அவ்வளவுதான் என்று நினைத்தார்கள். அப்போதுதான் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இந்த வலியும், வேதனையும் எனக்கானது இல்லை என்று நினைத்தேன். இதற்கு மேலும் இதை சகித்துக்கொள்ள கூடாது என முடிவெடுத்தேன்.

திடீரென தெலுங்கில் நாகார்ஜுனா படத்திலும், தமிழில் “ராஜா ராணி” படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை அடுத்து நான் திரும்பவும் சினிமாவில் நடிக்க தயாரானேன்” என்று தனது வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

விளம்பரம்

.



Source link