ஆரம்பத்தில் இலவசமாக பயன்படுத்தப்பட்ட இந்த ஆப்ஸ், சில பரிவர்த்தனைகளுக்குப் பிறகு கட்டணம் வசூலிக்கத் தொடங்கின. எனவே, பணம் செலுத்தும்போது உங்கள் கணக்கில் இருந்து கூடுதல் பணம் செல்கிறது. இதன் விளைவாக, மீண்டும் பலர் பண பரிவர்த்தனைகளுக்கு NEFT, Bank App மூலம் பணம் செலுத்தி வருகின்றனர்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வங்கிகளுக்கு இடையே பணப் பரிமாற்றம் எளிதாகவும், வேகமாகவும் ஆகிவிட்டது. ஆனால், வங்கிகள் பல்வேறு வகையான கணக்குகளில் இந்த சேவைகளுக்கு வெவ்வேறு கட்டணங்களை வசூலிக்கின்றன. வங்கிக் கணக்குகளின் வகைகள் மற்றும் பணப் பரிமாற்றம் எவ்வாறு செய்யப்படுகிறது? எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

வங்கிக் கணக்கு வகைகள்:

சேவிங்ஸ் அக்கௌன்ட்:

சேவிங்ஸ் அக்கௌன்ட் என்பது பொதுவாக தனிப்பட்ட பயன்பாட்டிற்கானவை. அதில் சேமிக்கும் பணம் உங்களுக்கு மிதமான வட்டியை வழங்குகிறது. ஒருவர் தனது பணத்தை வங்கியில் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த அக்கௌன்ட் சிறந்த தேர்வாகும். பணப் பரிமாற்றத்திற்கு லிமிடெட் மற்றும் ஃப்ரீ ட்ரான்சக்ஷன் போன்ற வசதிகள் உள்ளன.

கரண்ட் அக்கௌன்ட்:

கரண்ட் அக்கௌன்ட் என்பது வணிகர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அக்கௌன்ட்டில் ட்ரான்சக்ஷன் லிமிட் இல்லை, ஆனால் பணப் பரிமாற்றங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்.

சேலரி அக்கௌன்ட்:

இந்த செலரி அக்கௌன்ட் ஆனது வேலை செய்யும் நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் செய்யும்போது, குறைவான கட்டணம் வசூலிக்கப்படலாம் அல்லது கட்டணம் இல்லா பரிமாற்றங்களும் நடக்கலாம்.

என்ஆர்ஐ அக்கௌன்ட் (வெளிநாட்டு குடிமக்கள் அக்கௌன்ட்):

என்ஆர்ஐ அக்கௌன்ட் ஆனது வெளிநாட்டினர் அல்லது இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் நபர்களுக்கானது. வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு பணப் பரிமாற்றம் செய்யும்போது கட்டணங்கள் வசூலிக்கப்படலாம்.

பணப் பரிமாற்றங்களின் வகைகள் மற்றும் கட்டணங்கள்:

NEFT (நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் ட்ரான்ஸ்ஃபர்):

சிறிய மற்றும் பெரிய பரிவர்த்தனைகளுக்கு NEFT பயனுள்ளதாக இருக்கும். இதற்கான பரிவர்த்தனை கட்டணமாக ரூ.1 முதல் ரூ.25 வரை (வங்கி வாரியாக மாறுபடும்) இருக்கலாம்.

RTGS (ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்):

ரூ.2 லட்சத்துக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு RTGS பயனுள்ளதாக இருக்கும். இதற்கான பரிவர்த்தனை கட்டணமாக ரூ.25 முதல் ரூ.50 வரை இருக்கலாம்.

IMPS (இம்மிடியேட் பேமென்ட் சர்வீஸ்):

IMPS ஆனது அவசர பரிவர்த்தனைகளுக்கு 24×7 மணி நேரமும் கிடைக்கும். இதற்கான பரிவர்த்தனை கட்டணமாக ரூ.5 முதல் ரூ.15 வரை இருக்கலாம்.

UPI (யூனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்):

பிரீமியம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம் என்றாலும், சிறிய பரிவர்த்தனைகளுக்கு இலவசம்.

கிளாசிக் செக் ட்ரான்ஸ்ஃபர்: செக் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு டிஜிட்டல் கட்டணம் இல்லை.

இதையும் படிக்க: ஹோம் லோன் பற்றிய முக்கியமான வார்த்தைகள்… என்னென்ன தெரியுமா…?

பணத்தை சேமிப்பதற்கான உதவிக் குறிப்புகள்:

UPI மற்றும் IMPSஐப் பயன்படுத்தவும்:

சிறிய பரிவர்த்தனைகளை இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் செய்யலாம்.

டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸைப் பயன்படுத்தவும்:

வங்கிகள் சில சமயங்களில் டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு தள்ளுபடியை வழங்குகின்றன.

வங்கி விதிகளை சரிபார்க்கவும்:

ஒவ்வொரு வங்கிக்கும் வெவ்வேறு கட்டணங்கள் உள்ளன.



Source link