Last Updated:

Rajini | “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்”

கமல் ஹாசன்

பாட்ஷா படத்தில் தான் பேசும் வசனத்தை மேற்கோள்காட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதேபோல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த வசனம் அவர் நடித்த பாட்ஷா படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்க: பொங்கலையொட்டி அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் ஆகாது… தள்ளி வைக்கப்படுவதாக லைகா நிறுவனம் அறிவிப்பு….

அதேபோல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “2025ல் நாம் அடியெடுத்து வைக்கும் இத்தருணம், இப்பாதையை நமதாக்கிக்கொண்டு ஒரு சிறந்த அத்தியாயத்தை எழுதுவதற்கான நேரம். புத்தாண்டு என்பது காலத்தால் முன்னால் போவது என்பது மாத்திரமல்ல; ஞானத்தோடு, உறுதியோடு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளத் தயார் நிலையோடு முன்னோக்கி நகர்வது. நமது நல்ல கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இப்புத்தாண்டை ஆக்குவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!” என தெரிவித்துள்ளார்.



Source link