Last Updated:
New Year Cake Sale| புத்தாண்டை முன்னிட்டு கேக் விற்பனை கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.
புத்தாண்டை முன்னிட்டு அனல் பறக்கும் வேகத்தில் கேக் விற்பனை நடைபெற்று வருகிறது. பல்வேறு விதவிதமான புதுரக கேக்குகளை வாங்க மக்கள் கேக் கடைகளில் குவிந்துள்ளனர்.
புத்தாண்டு என்பது ஒரு ஆண்டின் தொடக்க நாளைக் குறிப்பதாகும். இதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள். புத்தாடை அணிந்தும், இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டும், ஒருவரையொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டும் தங்களின் சந்தோஷத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்வார்கள். கிறிஸ்துமஸ் விழாவிற்கு எப்படி கேக் முக்கியமான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறதோ, அதுபோன்றுதான் புத்தாண்டு நாளில் பலவகையான கேக்குகள் இடம் பெறுகின்றன. அந்த வகையில், 2025-ஆவது ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் வெகு விமரிசையாகக் நாளை (ஜன.01)கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கேக் தயாரிப்புப் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் செயல்படும் பேக்கரி கடைகளில், ஸ்ட்ராபெர்ரி, வெண்ணிலா, பட்டர் ஸ்காட்ச், ஃப்ரூட் கேக், பைனாப்பிள் கேக், ரசமலை, பிளாக் பாரஸ்ட், லெமன் கேக் பிளேவர் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகள் பல வண்ணங்களில் தயாராகி வருகிறது. ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஒரு சில மணி நேரமே இருப்பதால் அரை கிலோ முதல் 15 கிலோ வரை கேக்குகள் ஆர்டரின் பேரில் தற்போது தயாரித்து ஸ்டாக் வைத்து வருவதாகவும், கேக் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முட்டை, டால்டா உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருந்தாலும், வேறு வழியின்றி தொழிலாளர் நிறைந்த பகுதி என்பதால், பழைய விலைக்கே கேக்குகளை விற்பனை செய்து வருவதாக பேக்கரி உரிமையாளர் சிவம் என்பவர் தெரிவித்தார்.
புத்தாண்டுக்கு கேக் வெட்டிக்கொண்டாடும் நிகழ்வு தற்போது பொதுவான வழக்கமாக மாறி வரும் சூழலில் நம்முடைய பாரம்பரியத்திலும் கேக் தற்போது ஒரு பகுதியாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
December 31, 2024 4:09 PM IST