இவற்றின் ஆரம்ப விலைகள் முறையே ரூ.7,499, மற்றும் ரூ.5,999 ஆகும். இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் ஆல்வேஸ்-ஆன்-டிஸ்ப்ளே, சைகை கட்டுப்பாடுகள், ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பேட்டரி லைஃப் போன்ற அம்சங்களுடன் வருகின்றன. மேலும் இவற்றில் AI-பவர்ட் பர்ஸ்னலைசேஷன் மற்றும் மேம்பட்ட சுகாதார கண்காணிப்பு திறன்கள் உள்ளன.
மேற்கண்ட 2 மாடல்களில் காஸ்ட்லி மாடலான ColorFit Pro 6 Max ஸ்மார்ட் வாட்ச்சானது 410x502px ரெசல்யூஷன் மற்றும் 5 ATM வாட்டர் ரெஸிஸ்டென்ஸூடன் கூடிய 1.96-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது பில்ட்-இன் GPS, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கன்ஸ்ட்ரக்ஷனைக் கொண்டுள்ளது, மேலும், மெட்டல், மேக்னட்டிக், லெதர் மற்றும் சிலிகான் வகைகள் உள்ளிட்ட பல ஸ்ட்ராப் ஆப்ஷன்களில் வருகிறது.
இதனிடையே இந்த சீரிஸில் இருக்கும் மற்றொரு மாடலான ColorFit Pro 6 ஸ்மார்ட் வாட்ச்சானது 390x450px ரெசல்யூஷன் மற்றும் IP68 வாட்டர் ரெசிஸ்டென்ஸூடன் கூடிய 1.85-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களுமே EN2 ப்ராசஸரால் இயக்கப்படுகின்றன மற்றும் Nebula UI 2.0ல் இயங்குகின்றன. மேலும், இவை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 7 நாட்கள் வரை பேட்டரி லைஃபை வழங்கும் என்கிறது நிறுவனம்.
இதையும் படிக்க: ரூ.18,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட்ஃபோன்கள்….!
இந்த ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் யூஸர்களின் ஸ்டைல் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு AI-பவர்ட் வாட்ச் ஃபேஸ்களுடன், பர்ஸனலைஸ்ட் ஃபிட்னஸ் மற்றும் ஆரோக்கியம் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் AI Companion-ஐ அறிமுகப்படுத்துகிறது. இவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் கூடுதல் அம்சங்களில் சைகை கட்டுப்பாடுகள், எமர்ஜென்சி SOS, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் டிவைஸ்களுடன் இணக்கமான ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி ஆகியவை அடங்கும்.
Noise நிறுவனத்தின் இணை நிறுவனர் அமித் காத்ரி பேசுகையில், “எங்கள் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸின் ஆறாவது தலைமுறையை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ColorFit Pro 6 சீரிஸானது, ஆண்டுதோறும் அர்த்தமுள்ள தயாரிப்பை யூஸர்களுக்கு வழங்குவதற்கான எங்கள் உறுதியை பிரதிபலிக்கிறது” என்றார். புதிய ColorFit Pro 6 Max தற்போது gonoise.com-ல் கிடைக்கும் அதே நேரத்தில் ColorFit Pro 6-விற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. வரும் ஜனவரி 27 முதல் இதன் விற்பனை தொடங்கும்.
இதையும் படிக்க: பிளிப்கார்ட் சூப்பர் காய்ன் மூலம் இலவச ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் பெறுவது எப்படி…? எளிமையான 5 படிகள்…!
இரண்டு மாடல்களும் வரும் ஜனவரி 29, 2025 முதல் Amazon மற்றும் Flipkart-ல் கிடைக்கும். மெட்டல் ஸ்ட்ராப் வேரியன்ட் கொண்ட Max மாடல் ரூ.7,999 விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில் Pro 6 ஸ்ட்ராப் ஆப்ஷனை பொறுத்து ரூ.5,999 முதல் ரூ.6,499 வரையிலான விலையில் கிடைக்கும்.
January 23, 2025 2:21 PM IST