Last Updated:

OTT Spot | மோகன்லால் இயக்கி நடித்துள்ள ‘பரோஸ்’ மலையாள திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.

News18

மோகன்லால் இயக்கி நடித்துள்ள ‘பரோஸ்’ மலையாள திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லால் இயக்குநராக அவதாரமெடுத்திருக்கும் திரைப்படம் ‘பரோஸ்’. 3டியில் உருவான இந்த பிரம்மாண்ட ஃபேன்டஸி படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைத்துள்ளார்.

ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், பின்னணி இசை அமைத்துள்ளார். குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவான இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் பான் இந்தியா முறையில் வெளியானது.

ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் பாக்ஸ் ஆஃபீஸில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்தப் படம் இன்று (ஜன.21) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.



Source link