Last Updated:

சரத்குமார் நடித்துள்ள ‘ஸ்மைல் மேன்’ திரைப்படம் நாளை (ஜன.24) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News18

சரத்குமார் நடித்துள்ள ‘ஸ்மைல் மேன்’ திரைப்படம் நாளை (ஜன.24) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷ்யாம் பிரவீன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஸ்மைல் மேன்’. இது சரத்குமாரின் 150-வது படம். மேக்னம் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதையும் வாசிக்க: Mammootty | மம்மூட்டி படத்துக்கு எதிரான வழக்கு..விசாரணை ஒத்திவைப்பு

படத்துக்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.அம்னீஷியா நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற முன்னாள் காவலதிகாரி, சிக்கலான வழக்கை விசாரிக்க முனைகிறார்.

இந்த பரபரப்பான த்ரில்லர் கதையில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். இந்நிலையில் இந்தப் படம் ஜனவரி 24 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Source link