Last Updated:

டோவினோ தாமஸ், த்ரிஷா நடித்த ‘ஐடென்டிட்டி’ படம் ஜீ5 ஓடிடியில் ஜனவரி 31-ம் தேதி வெளியாகும். படத்தை மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் கிடைக்கும்.

News18

டோவினோ தாமஸ், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஐடென்டிட்டி’ மலையாள படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் அகில் பால், அனஸ் கான் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ‘ஃபாரன்ஸிக்’ (Forensic). இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

அகில் பால், அனஸ்கான் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஐடன்டிடி’ (identity). இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். வினய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அண்மையில் நிறைவடைந்தது.

இதையும் வாசிக்க: 24 வயதில் 700 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி.. இணையத்தில் கவனம் பெறும் பிரபல நடிகை

படம் கடந்த ஜனவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரூ.20 கோடி அளவில் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப் படம் வரும் ஜனவரி 31-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை, மலையாளம் தவிர்த்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பார்க்க முடியும்.



Source link