திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் மவுசு சமீப காலமாக குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணம் புது படங்கள் குறைந்தது 4 வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகி விடுகிறது. மற்றொன்று பிடித்த படங்களை பிடித்த நேரத்தில் குடும்பத்துடன் வீட்டில் இருந்தவாறே ஓடிடி தளத்தில் பார்த்து மகிழலாம். இதனால் திரையரங்குகளுக்கும் மேல் ஓடிடி தளங்களுக்கான மவுசு தற்போது டாப்பில் உள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவரக்கூடிய சென்டிமென்ட், அனிமேஷன், ரொமான்டிக், திரில்லர், ஹாரர், காமெடி, டாக்குமெண்டரி, சயின்ஸ் பிக்ஷன் என அனைத்து விதமான படங்களும் தற்போது ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கிறது. அந்த வகையில் இந்த வீக் எண்ட் உங்களுக்கான தரமான Watchlist-ஐ நாங்க ரெடி பண்ணிருக்கோம், மிஸ் பண்ணாம பாருங்க.
Spell Bound: விக்கி ஜென்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள அமெரிக்கன் மியூசிக்கல் அட்வென்ச்சர் பேன்டசி காமெடி திரைப்படம்தான் இந்த “Spell Bound”. மாயாஜால வலையில் மாட்டி மிருகங்களாக மாறிய லும்ப்ரியாவின் அரசன் மற்றும் அரசியான தனது தாய் தந்தையை காப்பாற்ற Ellian என்ற இளவரசியின் தேடல்தான் படத்தின் கதை. காமெடி, அட்வென்ச்சர் மற்றும் மாயாஜாலம் நிறைந்த இந்த படத்தை உங்கள் குழந்தைகளோடு Netflix ஓடிடி தளத்தில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Alien Romulus: மைனிங் பிளானெட்டில் குடிகொண்டிருக்கும் இளைஞர்கள் அங்கிருந்து எப்படியாவது மீண்டு செல்லவேண்டும் என்ற தீராத எண்ணத்தில் மர்மமான கைவிடப்பட்ட ஸ்பேஸ் ஷிப் ஒன்றை கடத்த திட்டம் தீட்டுகின்றனர். இதை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. ஏலியனை மையமாக வைத்து இயக்கப்பட்ட இந்த படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. இந்த படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.
Martin: அர்ஜுன் சார்ஜா எழுத்தில் ஏபி அர்ஜுன் இயக்கத்தில் துருவ் ஷார்ஜா அதிரடி நடிப்பில் உருவான கன்னட ஆக்ஷன் திரில்லர் படம் தான் ‘Martin’. இந்த படத்தில் அர்ஜுன் சக்சேனா, மார்ட்டின் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் துருவ் சார்ஜா. இந்த படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கவும்.
Vivesini (விவேசினி): பவன் ராஜகோபாலன் இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான படம் விவேசினி. அமானுஷ்யம், மூடநம்பிக்கை இவற்றை நம்பாத பெண் அவற்றை பொய் என்று நிரூபிக்கும் பொருட்டு அமானுஷ்யம் நிறைந்த காட்டுக்குள் நுழைகிறாள், அதன் பின் நடக்கும் ஒவ்வொரு திகில் சம்பவங்களும் அவளது நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் அரங்கேறுகிறது. திகில் காட்சிகளுடன் நகரும் இந்த ஹாரர் திரில்லர் படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கவும்.
Kiskindha Kandam: டின்ஜித் ஐயத்தன் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் ‘கிஷ்கிந்தா காண்டம்’. வயநாடு கிராமத்தில் வாழும் ஆர்மி ஆபிசர் மற்றும் அவரது குடும்பத்தை சுற்றி நடக்கும் விறுவிறுப்பான திரில்லர் காட்சிகளை கொண்டு உருவாகியுள்ள படம் இது. திரையரங்கில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கவும்.
Rocket Driver : அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி படம்தான் “ராக்கெட்ரி டிரைவர்”. சுனைனா, காத்தாடி ராமமூர்த்தி, நாகவிஷால் மற்றும் பலர் நடித்துள்ள இந்த காமெடி படத்தை ஆஹா OTT தளத்தில் பார்க்கவும்.
.