ஆம், அடுப்பு இல்லாமல் ஒருவர் கோவையில் சமைத்து, உணவகமே வைத்து நடத்தி வருகிறார். கோவை சிங்காநல்லூர் பகுதியில் ”படையல்” என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் சிவா, நம் பாரம்பரிய உணவுகளைச் சமைத்து 30 நாட்களும் 30 வகையான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார். அதுவும் அடுப்பே இல்லாமல் சமைத்து.

இது குறித்து படையல் சிவா கூறுகையில், “உலகம் முழுவதும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட (no boil, no oil) வார்த்தை பல பேர்களுக்கு வாழ்க்கையாகவே மாறி இருக்கிறது. அதில் நானும் ஒருவன். இந்த கான்செப்ட் 2013 இல் எனக்குக் கிடைத்து. கடந்த 11 ஆண்டுகளாக இதை கையில் எடுத்துச் செய்து கொண்டிருக்கிறேன்.

இதையும் படிங்க: Skin Care: பீட்ரூட் மட்டும் போதும்… வீட்டிலிருந்தே பெறலாம் கொரியன் ஸ்டைல் முகப்பொலிவு…

அடுப்பு இல்லாமல் எண்ணெய் இல்லாமல் சமைப்பதற்குப் பெயர் தான் நோ பாயில் நோ ஆயில். இது ஆதிகாலத்தில் இருந்தே இருக்கக்கூடியது தான். காய்கறிகளைச் சாப்பிட்டோம், பழங்களைச் சாப்பிட்டோம், பச்சையாகச் சாப்பிட்டோம். நெருப்பைக் கண்டுபிடித்ததற்குப் பிறகு தான் சமைத்துச் சாப்பிட்டோம்.

மனிதனுக்கு அடிப்படைத் தேவை உணவு. அதில் நம் பாரம்பரியத்தில் நிறைய அரிசி வகை இருக்கிறது. நிறைய உணவு வகை இருக்கிறது. நிறைய அந்நிய படையெடுப்பு இருப்பதால் நம் பாரம்பரியத்தை இழந்து விட்டோம். உணவே மருந்து என்ற தத்துவத்தை மாற்றிவிட்டது. இயற்கையாக இருக்கக்கூடிய உணவைச் சாப்பிட்டால் உடலில் உள்ள நோய்கள் சரியாகும், குணமாகும்.

2014இல் தான் ”படையல்” என்கிற பெயர் உருவானது. 500 பேருக்கு அடுப்பில்லாமல் எண்ணெய் இல்லாமல் சமைக்கச் சொல்லிக் கேட்டார்கள். அப்பொழுது அவர் பெயர் தேவைப்பட்டது. எனக்கு இந்தப் பெயர் தவத்தில் கிடைத்தது.

இதையும் படிங்க: Statistics Department Recruitment: மாவட்ட புள்ளியியல் அலுவலகத்தில் வேலை… டிகிரி போதும்… மாதம் ரூ.50,000 சம்பளம்…

இந்த நோ பாயில் நோ ஆயில் சமையலை நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறோம். 2019 -2020இல் லாக் டவுன் வந்தது. அதிலிருந்து தான் ஆன்லைனில் வகுப்பைத் தொடங்கினோம்.

நமது படையல் உணவகத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை காலை உணவு கிடைக்கும். இட்லி, பொங்கல், கிச்சடி போன்ற உணவுகள் கிடைக்கும். 30 நாளும் 30 வகையான உணவுகளைச் செய்து கொடுத்து வருகிறோம். தினமும் ஒரு பாரம்பரிய அரிசியில் உணவு இருக்கும். 14 வகையான உணவுகளை மதிய உணவாகக் கொடுத்து வருகிறோம்.

நமது நாட்டுக் காய்கறிகளைப் போட்டுப் பருப்பு இல்லாமல், எண்ணெய் இல்லாமல் சமைத்துக் கொடுத்து வருகிறோம். மூலிகை ரசங்கள், பொரியல், வாழைக்காய் பொரியல், பூசணிக்காய் பொரியல் போன்ற பொரியல்களும், மூலிகை அவியல், கருவேப்பிலை துவையல், எண்ணெய் இல்லாமல், புளி இல்லாமல், மிளகாய் இல்லாமல் ஊறுகாய் செய்து வழங்குகிறோம்.

இதையும் படிங்க: BEL Recruitment: ரூ.1.40 லட்சம் வரை மாதச் சம்பளம்… பெல் நிறுவனத்தில் 350 இன்ஜினியர் பணியிடங்கள்…

மேலும், பிரெஷ்ஷாக ஒரு வெல்கம் டிரிங்ஸ், செம்பருத்தி பன்னீர் ரோஜா பூக்களை வைத்து வெல்கம் டிரிங். தயிர் மோர் இல்லாமல் தேங்காய்ப் பால் மூலம் தயிர் மோர் செய்து கொண்டு வருகிறோம். தேங்காய் பாலில் தயிர் சாதம், பச்சடி போன்றவையும் இருக்கும். 16 வகையான உணவு மதிய நேரத்தில் கிடைக்கும். 2500 வகையான உணவுகளை நாங்கள் செய்து வருகிறோம்.

இதற்கு முன்னால் காந்திபுரத்தில் இருந்தது, இப்பொழுது சிங்காநல்லூரில் காமராஜர் ரோட்டில் இடம் மாற்றியுள்ளோம். நீங்கள் வரும்பொழுது எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, என்ன வேண்டும்? எப்பொழுது வருகிறீர்கள்? என்ன உணவு என்று முன்கூட்டியே சொன்னால் அப்பொழுது செய்து கொடுப்போம்.

மக்கள் இங்கு வந்து சாப்பிட்டும் கொள்ளலாம், எப்படி செய்வது என்றும் கற்றுக் கொள்ளலாம். இந்த நோ பாயில் நோ ஆயில் உணவுகளை நேரிலும் கற்றுக் கொள்ளலாம், ஆன்லைன் மூலமாகவும் கற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link