Last Updated:
Pisasu 2 | தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தற்போது படம் ரிலீசாகும் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேதி அறிவிக்கப்படவில்லை.
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் உள்ளது. தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தற்போது படம் ரிலீசாகும் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேதி அறிவிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் ‘பிசாசு 2’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கௌரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கியுள்ளார் மிஷ்கின். இந்நிலையில் இந்தப் படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் தேதி குறிப்பிடப்படவில்லை. தற்போது மிஷ்கின் விஜய் சேதுபதியை வைத்து ‘டிரெய்ன்’ படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
January 01, 2025 6:38 PM IST