பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan) என்பது மத்திய அரசால் நடத்தப்படும் திட்டமாகும். இதன் கீழ் விவசாயிகள் நிதியுதவி பெறுகிறார்கள். அதாவது, இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகள் தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 பெறுகிறார்கள். இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வந்து சேரும்.

விளம்பரம்

கிசான் சம்மன் நிதியின் 18வது தவணை அக்டோபர் 5, 2024 அன்று வெளியிடப்பட்டது. தற்போது கிசான் சம்மன் நிதியின் 19வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். 2025 பிப்ரவரி முதல் வாரத்தில் விவசாயிகளின் கணக்குகளுக்கு 19வது தவணை பணம் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த தேதியை அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் தவணைகள் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் வெளியிடப்படுகின்றன.

விவசாயிகள் தங்கள் பெனிபிஸியரி ஸ்டேட்டஸ்-ஐ எவ்வாறு சரிபார்க்கலாம்?

விளம்பரம்

பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் தங்கள் பெனிபிஸியரி ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம்:

  1. PM கிசானின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்லவும் (https://pmkisan.gov.in).

  2. ஹோம் பேஜில் உள்ள ‘பெனிபிஸியரி ஸ்டேட்டஸை’ கிளிக் செய்யவும்.

  3. உங்கள் ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை வழங்கவும்.

  4. விவரங்களை சமர்ப்பித்த பிறகு, உங்கள் இன்ஸ்டால்மென்ட் ஸ்டேட்டஸ் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும்.

PM கிசானுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. www.pmkisan.gov.in என்ற வெப்சைட்டுக்குச் செல்லுங்கள்.

  2. “நியூ ஃபார்மர் ரிஜிஸ்ட்ரேஷன்” ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

  3. ஆதார் எண், மாநிலம், மாவட்டம் மற்றும் வங்கித் தகவல் போன்ற தேவையான விவரங்களை என்டர் செய்யவும்.

  4. படிவத்தை சமர்ப்பித்து பிரின்ட் அவுட் எடுக்கவும்.

  5. இப்போது PM கிசான் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி “சேவ்” பட்டனை அழுத்தி, அதனை எதிர்கால தேவைக்காக ஒரு பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: FD Interest Rates | ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் திட்டம் உள்ளதா? வட்டியை மாற்றி அமைத்துள்ள 5 வங்கிகள்

PM கிசானுடன் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி?

  1. அருகிலுள்ள காமன் சர்வீஸ் சென்டர்-க்கு (CSC) செல்லவும் அல்லது https://pmkisan.gov.in என்ற வெப்சைட்டுக்குச் செல்லுங்கள்.

  2. ‘அப்டேட் மொபைல் நம்பர்’ ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.

  3. ஆதார் எண் மற்றும் புதிய மொபைல் எண்ணை என்டர் செய்யவும்.

  4. ரெக்வஸ்ட் ஃபார் வெரிஃபிகேஷன் என்பதை சப்மிட் செய்யவும்.

பொதுவான சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது?

நிலுவையில் உள்ள தவணை: உங்கள் தவணை நிலுவையில் இருந்தால், உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதையும், உங்கள் விண்ணப்ப விவரங்கள் சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

குளிர்காலத்தில் உங்கள் கண் வறட்சியை போக்க உதவும் 9 வழிகள்.!


குளிர்காலத்தில் உங்கள் கண் வறட்சியை போக்க உதவும் 9 வழிகள்.!

இன்ஆக்ட்டிவ் ஸ்டேட்டஸ்:: விவசாயிகள் தங்கள் கணக்குகளை மீண்டும் செயல்படுத்த CSCகளில் தங்கள் ஆவணங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும்.

.



Source link