Last Updated:
Pongal Movie Release: இந்த பொங்கலுக்குப் பல படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இளைஞர்கள் எந்த படம் பார்க்க விரும்புகிறார்கள் எனப் பார்க்கலாம்…
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் அஜித் நடிப்பில் உருவாகி இருந்த விடாமுயற்சி திரைப்படம் தான். லைகா நிறுவனத்தின் பிரமாண்டத் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம், பொங்கலுக்கு வெளியாக இருந்தது.
இந்த படம் சில காரணங்களால் பொங்கல் ரேஸில் இருந்து விலகுவதாக படக்குழு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டதால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். விடாமுயற்சி வெளியீடு தாமதமானதால் இந்த ஆண்டு பொங்கலுக்கு வணங்கான், கேம் சேஞ்சர், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, மதகஜராஜா, தருணம், மெட்ராஸ்காரன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த திரைப்படங்களில் எந்த திரைப்படத்திற்கு நீங்கள் பொங்கலுக்கு போவீங்க என கல்லூரி மாணவர்களிடம் கேட்டபோது பல கல்லூரி மாணவர்கள் கேம் சேஞ்சர் என கூறினர். படம் பிரமாண்டமாக இருக்கும் என்பதாலும், ஷங்கர், ராம் சரண் படம் என்பதாலும் கேம் சேஞ்சர் படம் பார்க்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Mayiladuthurai Tourist Spot: தமிழர்களின் வரலாற்றைத் தாங்கி நிற்கும் பூம்புகார்… இந்த பொங்கல் லீவ்ல ஒரு விசிட் அடிங்க…
மேலும் ஒரு சிலர் நீண்ட காலம் கழித்து வெளியாகும் மதகஜராஜா, காதலிக்க நேரமில்லை, பாலா இயக்கி வெளியாகியுள்ள வணங்கான் போன்ற படங்களுக்குச் செல்வோம் என்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Mayiladuthurai,Nagapattinam,Tamil Nadu
January 15, 2025 4:45 PM IST