Last Updated:

Tamil Movies Pongal Release: இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொமான்ஸ், ஆக்‌ஷன் என பல ஜானர்களில் படங்கள் வெளியாக உள்ளன.

X

ரொமான்ஸ்,

ரொமான்ஸ், ஆக்‌ஷன், காமெடி என பல ஜானர் வருது… அரை டஜன் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ்…

ஒரு பெரிய படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் போனால், திரையரங்க உரிமையாளர்கள், ரசிகர்கள் உட்பட பலர் ஏமாற்றம் அடைவார்கள். அதே சமயம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பல சின்ன பட்ஜெட் படங்கள் வரிசைக்கட்டி வெளியாகும்.

அந்த வகையில் இந்த வருடம் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாகாததால், பொங்கலுக்கு ஏழு படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன. அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் பாலா இயக்கத்தில் “வணங்கான்” திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் முதலில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் கதையில், ராம் சரண் நடிப்பில், தில் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் “கேம் சேஞ்சர்” படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தில் போறிங்களா… அப்போ இதை செய்யாதீங்க…

சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் விஷ்ணு வர்தன் இயக்கியிருக்கும் படம் “நேசிப்பாயா”. இதில் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நாயகனாகவும், அதிதி ஷங்கர் நாயகியாகவும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம், தற்போது பொங்கலுக்கு வெளியாகிறது.

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் முழுக்க முழுக்க காதல் படமாக வெளியாகவிருக்கும் படம் “காதலிக்க நேரமில்லை”. இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. ஷேன் நிகம், கலையரசன், ஐஷ்வர்யா தத்தா, நிஹரிக்கா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “மெட்ராஸ்காரன்”. இப்படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.

“தேஜாவூ” படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அரவிந்த் சீனிவாசனின் அடுத்த படம் “தருணம்”. கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில் வெளியாகும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். குறிப்பாக இந்த பொங்கல் ரேஸில் விஷால் நடித்துள்ள ‘மதகஜராஜா’ திரைப்படமும் இணைந்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: One Stop Centre-ல் வேலைவாய்ப்பு … எந்த தேர்வும் இல்லை…. உடனே அப்ளை பண்ணுங்க…

விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் 2013 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்திற்கு மீண்டும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link