Last Updated:
Pushpa 2 |இந்தப் படத்தில் கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த ரீலோடட் வெர்ஷன் வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தின் ரீலோடட் வெர்ஷன் வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் படத்தில் 20 நிமிட காட்சிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘புஷ்பா’. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்தப் படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் இந்தி பேசும் மாநிலங்களில் வசூலை வாரி குவித்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டது. அதன்படி ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதே நடிகர்கள் நடித்த இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீ லீலா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
சாம்.சி.எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். படம் வெளியாகி வசூலில் மிரட்டி வருகிறது. 32 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1831 கோடியை வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தில் கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த ரீலோடட் வெர்ஷன் வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தமிழில் பொங்கல் பண்டிகை மற்றும் தெலுங்கில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பார்வையாளர்களை கவர இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் நீளம் 3.15 மணிநேரம் என இருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக 30 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
January 07, 2025 7:10 PM IST