Last Updated:
Pushpa 2 | இதன் மூலம் தெலுங்கின் அதிகபட்ச வசூல் சாதனையான ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ வசூல் சாதனையான ரூ.1800 கோடி வசூலை முறியடித்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது. தெலுங்கில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ஆனால், இந்திய அளவில் முக்கியமான படத்தின் சாதனையை இன்னும் முறியடிக்கவில்லை என கூறப்படுகிறது.
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா’. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்தார்.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் படம் வசூல் குவித்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக இப்படத்தின் 2வது பாகம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
Also Read: Honey Rose | “அந்த தொழிலதிபரால் பாதிக்கப்பட்டேன்..” – நடிகை ஹனி ரோஸ் ஆதங்கம்
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருவதுடன் வசூலிலும் சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள வசூலின்படி, படம் வெளியாகி 32 நாட்களில் உலக அளவில் ரூ.1831 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தெலுங்கின் அதிகபட்ச வசூல் சாதனையான ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ வசூல் சாதனையான ரூ.1800 கோடி வசூலை முறியடித்துள்ளது. ஆனால் இந்திய அளவில் ஆமீர்கானின் ‘தங்கல்’ படம் ரூ.2000 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை ‘புஷ்பா 2’ முறியடிக்குமா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.
January 06, 2025 6:17 PM IST