Last Updated:

அதிகம் வசூலித்த இந்திய சினிமா என்ற அடிப்படையில் அமீர்கான் நடித்த “தங்கல்” திரைப்படத்திற்கு அடுத்தபடியாக “புஷ்பா 2” திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படம் முன்பு வெளியான “பாகுபலி 2”, “கேஜிஎப் 2” உள்ளிட்ட படங்களின் தியேட்டர் வசூல் சாதனையை முறியடித்து இருக்கிறது.

News18

அல்லு அர்ஜுன் நடிப்பில் திரையிட்ட இடங்களில் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள “புஷ்பா 2” திரைப்படம் ஓடிடி ரிலீஸிற்கு தயாராகி உள்ளது. இது குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் “புஷ்பா 2” திரைப்படம் கடந்த மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்துடைய முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றிருந்தது. இதனால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகம் காணப்பட்டது.

குறிப்பாக படம் உருவான தெலுங்கு வட்டாரத்தை தாண்டி வட மாநிலங்களிலும் “புஷ்பா 2” திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி வெளியான “புஷ்பா 2” திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துள்ளது. தற்போது வரை சுமார் 1800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்த திரைப்படம் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வசூலித்த இந்திய சினிமா என்ற அடிப்படையில் அமீர்கான் நடித்த “தங்கல்” திரைப்படத்திற்கு அடுத்தபடியாக “புஷ்பா 2” திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படம் முன்பு வெளியான “பாகுபலி 2”, “கேஜிஎப் 2” உள்ளிட்ட படங்களின் தியேட்டர் வசூல் சாதனையை முறியடித்து இருக்கிறது.

படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ஒரு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. திரையரங்குகளில் தொடர்ந்து இந்த படத்திற்கு வரவேற்பு இருப்பதால் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகாது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க – Vidaamuyarchi | அப்செட்டில் ரசிகர்கள்… அஜித்தின் ‘விடாமுயற்சி’ எப்போது ரிலீஸ்?

அதே நேரம் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் “புஷ்பா 2” திரைப்படத்தை மிக அதிகமான தொகைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தங்களது முதலீட்டை நடத்தி மீட்டெடுக்க விரும்புவதால் “புஷ்பா 2” திரைப்படம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Source link