Last Updated:

QR கோடு மோசடிகள் எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் அதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது சம்பந்தமான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

News18

இந்தியாவில் தற்போது ஆன்லைன் டிரான்ஸாக்ஷன் பிரபலமடைந்து வருகிறது. யுனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் என்று அழைக்கப்படும் UPI மூலமாக பணம் செலுத்துவது நமக்கு எளிதான காரியமாக உள்ளது. ஆனால் இது பல்வேறு விதமான மோசடிகளுக்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

தற்போது QR கோடு மூலமாக அதிக அளவில் மோசடிகள் நடைபெற்று வருவது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மோசடி QR கோடுகளை ஸ்கேன் செய்ய வைத்து அதன் மூலமாக பெரிய அளவிலான தொகையை சில நொடிகளில் மோசடிக்காரர்கள் திருடி விடுகின்றனர். QR கோடு மோசடிகள் எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் அதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது சம்பந்தமான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

QR கோடு மோசடிகள் எவ்வாறு வேலை செய்கின்றன?:

பேமெண்ட்களை விரைவாகவும், எளிமையாகவும் செலுத்துவதற்கு QR கோடுகள் உதவுகிறது. ஆனால் இது மோசடிக்காரர்களுக்கு ஒரு கருவியாக மாறிவிடுகிறது. QR கோடு மோசடியில் ஏமாற்றப்படுவதற்காக குறிவைக்கப்பட்ட நபருக்கு போலியான QR கோடுகள் அனுப்பப்படுகிறது. பெரும்பாலும் இது லோக்கல் கடைகள், டெலிவரி சேவைகள் அல்லது சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம் போன்ற நம்பகமான இடங்களில் வைக்கப்படுகிறது.

இந்த QR கோடுகள் உண்மையான ஒன்றைப் போல இருந்தாலும் அதனை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பும் பொழுது அது மோசடிக்காரரின் அக்கவுண்டுக்கு கிரெடிட் ஆகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த QR கோடில் போலியான APK லிங்க்கும் அனுப்பப்படுகிறது. இதனை நீங்கள் டவுன்லோட் செய்யும் பொழுது தீங்கு விளைவிக்கும் அப்ளிகேஷன் அல்லது சாஃப்ட்வேர் சாதனத்தில் நுழைந்து உங்களுடைய வங்கி விவரங்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை பெறுகிறார்கள்.

QR கோடு மோசடிகளை தவிர்ப்பது எப்படி?:

UPI பேமென்ட் செலுத்தும் பொழுது பணத்தை நேரடியாக பெறுபவரின் சரி பார்க்கப்பட்ட UPI ID அல்லது மொபைல் நம்பருக்கு அனுப்பவும். QR கோடுகள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். தெரியாத இடங்கள் அல்லது சந்தேகம் நிறைந்த பிசினஸில் QR கோடுகள் ஸ்கேன் செய்யும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரெஸ்டாரண்டுகள், மார்க்கெட்டுகள் போன்ற பொது இடங்களில் மோசடிக்காரர்கள் மிக எளிதாக போலியான QR கோடுகளை ஒட்டி வைத்து விடுவார்கள். எனவே எப்பொழுதுமே நீங்கள் ஸ்கேன் செய்யும் QR கோடு நம்பகமானதா? என்பதை சரி பார்த்துவிட்டு பேமெண்ட்டை செலுத்துவது நல்லது.

கூடுதல் பாதுகாப்புக்காக Google Pay, Phonepe அல்லது Paytm போன்ற UPI பிளாட்ஃபார்ம்களுடன் இணைத்து வைப்பதற்கு தனியாக ஒரு பேங்க் அக்கவுண்ட்டை உருவாக்கி வைப்பது நல்லது. இந்த அக்கவுண்டில் குறைந்தபட்சமாக 3000 முதல் 4000 ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள். எனவே மோசடி நடைபெற்றாலும் கூட நீங்கள் பெரிய அளவிலான தொகையை இழக்க மாட்டீர்கள். இது உங்களுடைய முதன்மை சேமிப்பு கணக்கை பாதுகாப்பதற்கு ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்காக அமைகிறது.

ஒருவேளை நீங்கள் சந்தேகத்திற்குரிய பேமெண்ட் கோரிக்கைகள் அல்லது லிங்குகளை பெற்றால் அதன் URL அல்லது பேமென்ட் விவரங்களை சரி பார்க்க மறக்காதீர்கள். மோசடி லிங்குகளில் பெரும்பாலும் சிறிய அளவிலான எழுத்துப் பிழைகள் அல்லது வித்தியாசமான டொமைன் பெயர்கள் போன்றவை இடம்பெற்றிருக்கும். எனவே ஒரு நிமிடம் செலவு செய்து இதனை நீங்கள் சரி பார்த்து விட்டால் பெரிய மோசடிகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.



Source link