Last Updated:

Rajini | 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த தன்னை, ஒரு நடிகராக்கியது பெங்களூருவில் தான் படித்த APS பள்ளிதான் என உருக்கமாக கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ரஜினி பகிர்ந்துகொண்ட அவரது மலரும் நினைவுகளை பார்ப்போம். 

News18

10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த தன்னை, ஒரு நடிகராக்கியது பெங்களூருவில் தான் படித்த APS பள்ளிதான் என உருக்கமாக கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ரஜினி பகிர்ந்துகொண்ட அவரது மலரும் நினைவுகளை பார்ப்போம்.

பெங்களூருவில் நடிகர் ரஜினிகாந்த் படித்த APS பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேரில் கலந்துகொள்ள முடியாத சூழலில் பாங்காங்கில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்றை பதிவு செய்து அனுப்பியுள்ளார் ரஜினிகாந்த்.

அதில் தனது பள்ளிப்பருவ நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார். நடுநிலைப் பள்ளியில் 98 சதவிகிதம் மதிப்பெண் வாங்கிய தன்னை, APS  பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் சகோதரர் சேர்த்துவிட்டதாகவும், அதனால் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்க முடியாமல் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த தனக்கு வேதியியல் ஆசிரியர் ஒருவர் இலவசமாக சிறப்பு வகுப்பு எடுத்ததை நினைவு கூர்ந்த ரஜினி, அவரால்தான் தன்னால் கல்லூரிக்கு செல்ல முடிந்ததாகவும் நெகிழ்ந்தார்.

சில காரணங்களால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போனதாக கூறிய ரஜினிகாந்த், பள்ளிப் பருவத்தில் தான் செய்த சில குறும்புகளையும் பகிர்ந்து கொண்டார்.

இன்று ஒரு நடிகனாக தான் இருப்பதற்கு முக்கியக் காரணமே தனது பள்ளிதான் என்று கூறிய ரஜினிகாந்த், தான் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய தருணத்தையும் உற்சாகத்துடன் கூறினார்.

திரைத்துறை, அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் மட்டுமே ரஜினிகாந்தின் பேச்சைக் கேட்டு வந்த ரசிகர்களுக்கு, அவரது பள்ளிப் பருவம் தொடர்பான இந்த வீடியோ இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.





Source link