Last Updated:
ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் பின்னணியில் அமைந்துள்ள இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரவி மோகன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘கராத்தே பாபு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
‘பிரதர்’, ‘காதலிக்க நேரமில்லை’ படங்களைத் தொடர்ந்து ரவி மோகன் நடிக்கும் புதிய படத்தை ‘டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவியின் 34வது படமாக உருவாகும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.
தௌஃபி எஸ் ஜிவால், சக்தி வாசுதேவன், கே.எஸ். ரவிக்குமார், நாசர், Vtv கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜா ராணி பாண்டியன், சந்தீப் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு ‘கராத்தே பாபு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட டைட்டில் டீசரில், சட்டமன்றத்துக்குள் எதிர்கட்சியும், முதல்வரும் பேசும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் பேசுவார் என்றதும் ரவி மோகன் பேசுகிறார். அதில் ஆர்.கே.நகர் மக்கள் தனக்கு கொடுத்த பெயர் ‘கராத்தே பாபு’ என சொல்வதுடன் டீசர் முடிவு பெறுகிறது. அரசியல் பேசும் படமாக இது இருக்கும் என்பதை வீடியோ உணர்த்துகிறது. சர்ப்ரைஸ் அறிவிப்பாக வெளியான இந்த அரசியல் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
January 29, 2025 11:19 AM IST