Last Updated:
Saif Ali Khan | தனது வீட்டில் கொள்ளையன் புகுந்த போது நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் குறித்து நடிகர் சைஃப் அலிகான் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனது வீட்டில் கொள்ளையன் புகுந்த போது நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் குறித்து நடிகர் சைஃப் அலிகான் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில் கொள்ளையடிக்க சென்ற நபர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய சைஃப் அலி கானிடம் மும்பை பாந்த்ரா போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். காவல்துறையினரிடம் சைஃப் அலிகான் கூறியது:
“நானும் மனைவி கரீனா கபூரும் எங்கள் அறையில் இருந்தோம். அப்போது, எனது இளைய மகன் ஜஹாங்கிரை கவனித்து வரும் பணியாளரின் அலறல் சத்தம் கேட்டு தானும், மனைவி கரினாவும் அங்கு சென்றோம்.
இதையும் வாசிக்க: Game Changer | ஷங்கர் – ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?
அங்கே கையில் ஆயுதத்துடன் நின்றிருந்த கொள்ளையன், ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார். கொள்ளையனை தடுக்க முயன்ற போது எனது முதுகு, கழுத்து பகுதியில் கொள்ளையன் கத்தியால் குத்தினார்.
காயம் ஏற்பட்ட நிலையிலும் கொள்ளையனை அறைக்குள் தள்ளி அறையை பூட்டினேன்” என சைஃப் தெரிவித்தார். பின்னர் குடும்பத்துடன் வேறு தளத்துக்கு சென்றுவிட்டதாக சைஃப் அலிகான் கூறியுள்ளார்.
வீட்டு பணியாட்கள் அந்த அறையை திறந்து பார்த்த போது உள்ளே யாரும் இல்லை என தெரிவித்த சைஃப், அங்கிருந்து கொள்ளையன் எப்படி தப்பி சென்றார் என்று தெரியவில்லை என்றார். இந்த வழக்கில் வங்கதேசத்தை சேர்ந்த ஷாரிஃபுல் இஸ்லாம் என்பவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
January 24, 2025 1:02 PM IST