Last Updated:
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை குத்த பயன்படுத்திய கத்தியின் மூன்றாவது பாகத்தை கண்டுபிடித்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை குத்த பயன்படுத்திய கத்தியின் மூன்றாவது பாகத்தை கண்டுபிடித்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16ஆம் தேதி பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவத்தில் வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் பகிர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில், சைஃப் அலிகானின் வீட்டில் இருந்து ஏறத்தாழ ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் கத்தி கண்டறியப்பட்டதாகவும், அந்த கத்தியை தான் பணியாற்றிய உணவகத்தில் இருந்து திருடியதாக ஷரிபுல் பகிர் தெரிவித்ததாகவும் போலீசார் கூறினர்.
இதையும் வாசிக்க: Ram Gopal Varma | இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு சிறை… என்ன காரணம்?
சைஃப் அலிகானை குத்திய கத்தி மூன்று பாகங்களாக உடைந்த நிலையில், ஒரு துண்டு அவரது உடம்பில் இருந்தும், மற்றொரு துண்டு அவரது வீட்டில் இருந்து கண்டறியப்பட்டன.
கத்திக் குத்து சம்பவத்திற்கு முன்னரும் பின்னரும் ஷரிபுல் பகிர் அணிந்திருந்த உடை மற்றும் தொப்பி உள்ளிட்டவற்றை கைப்பற்றிய நிலையில் அவை அறிவியல்பூர்வ ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள சைஃப் அலிகானிடம் நடத்தப்படும் விசாரணையை தொடர்ந்து அடுத்த கட்ட உண்மை வெளிவரும் என போலீசார் கூறினர்.
January 24, 2025 8:59 AM IST