Last Updated:
குற்றவாளியின் முகம் தெளிவாக தெரியும் இந்த புகைப்படம், போலிசாரின் விசாரணையில் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
நடிகர் சைஃப் அலிகான் தனது மும்பை இல்லத்தில் கொள்ளையரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, குற்றவாளியின் சிசிடிவி புகைப்படம் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டின் மூத்த மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். மும்பையில் உள்ள தனது வீட்டில் சைஃப் அலி கான் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்துள்ளார். இதை தடுக்க வந்த பணியாளர் ஒருவரை கொள்ளையர் தாக்கிய நிலையில், அதை தடுக்க வந்த சைஃப் அலிகான் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் சைஃப் அலிகானுக்கு 6 இடங்களில் கத்திக்குத்து நடந்துள்ளது என தகவல் வெளியானது.
சம்பவத்தன்று இரவு, குற்றவாளி வீட்டிற்குள் மறைந்திருந்து, அதிகாலை 2 மணியளவில் ஜெஹ் அறையில் பெண் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு சைஃப் அலிகான் தலையிட்டபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சைஃப் அலிகான் மற்றும் பெண் ஊழியர் இருவரும் கத்தியால் காயமடைந்தனர்.
இதையும் படிக்க: சைஃப் அலிகான் மீதான கத்திக்குத்து தாக்குதலின்போது எங்கே சென்றார் மனைவி கரீனா கபூர்?
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலிகானுக்கு இரண்டு இடங்களில் ஆழமான காயங்கள் இருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக முதுகெலும்புக்கு அருகில் தீவிரமான காயம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி நீரஜ் உத்தமானி தெரிவித்தார். தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ள சைஃப் அலிகான், சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இன்று (ஜனவரி 16) அதிகாலை 2:33 மணிக்கு சைஃப் அலிகான் வீட்டு கட்டிடத்தின் படிக்கட்டில் குற்றவாளி இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. குற்றவாளியின் முகம் தெளிவாக தெரியும் இந்த புகைப்படம், போலீசாரின் விசாரணையில் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது. இதன் மூலம் விரைவில் குற்றவாளியை கைது செய்ய முடியும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சிசிடிவியில் சிக்கிய குற்றவாளியின் முகம்
இந்த வழக்கில் காவல்துறை 7 தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது. குற்றவாளி எப்படி சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைந்தார்? உள்ளே இருக்கும் ஆட்கள் யாரும் உதவினார்களா? என அனைத்து கோணங்களிலும் காவல்துறை விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
Mumbai,Maharashtra
January 16, 2025 6:27 PM IST