Last Updated:

சிங்கிள் ட்ராக் முறையில் வெளியாகி இருக்கும் அந்த பாடலை ஆண்டனிதாசன் பாடியிருக்கிறார். அந்த பாடல் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

News18

அஜித், திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் படத்தின் பாடல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பாடலை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர்.

சிங்கிள் ட்ராக் முறையில் வெளியாகி இருக்கும் அந்த பாடலை ஆண்டனிதாசன் பாடியிருக்கிறார். அந்த பாடல் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

அனிருத்தின் செலிபிரேஷன் பாடல்கள் லிஸ்டில் புது வரவாக ‘Sawadeeka’ பாடல் துள்ளல் இசையுடன் வைப் செய்ய வைக்கிறது. தற்போது ட்ரெண்டில் ‘இருங்க பாய்’ உள்ளிட்ட பாடல் வரிகளை தெருக்குறள் அறிவு எழுதியுள்ளார். தற்போது இப்பாடல் வரவேற்பை பெற்றுவருகிறது.

விடாமுயற்சி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். இதில் அஜித் குமாருடன் அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.





Source link