Last Updated:
SBI Account Mini Statement | ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் மினி ஸ்டேட்மெண்ட் என்பது சமீபத்திய டிரான்சாக்ஷன்களின் ஒரு சௌகரியமான சுருக்கம் என்று சொல்லலாம். இது குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் நீங்கள் செய்த கடந்த சில டிரான்ஸாக்ஷன்களை காண்பிக்கும்.
உங்களுடைய பேங்க் அக்கவுண்டில் சமீபத்தில் நீங்கள் செய்த டிரான்ஸாக்ஷன்களின் ஒரு விரைவான சுருக்கத்தை மினி ஸ்டேட்மெண்ட் என்ற பெயரில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பல வழிகளில் வழங்குகிறது. மிஸ்டு கால் சேவை, நெட் பேங்கிங், YONO அப்ளிகேஷன், SMS அல்லது வாட்ஸ்அப்பிலும் கூட உங்களுடைய அக்கவுண்டில் நடந்த சமீபத்திய செயல்பாடுகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் இந்த தகவலை உங்களால் பெற முடியும்.
SBI மினி ஸ்டேட்மெண்ட் என்றால் என்ன?
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் மினி ஸ்டேட்மெண்ட் என்பது சமீபத்திய டிரான்சாக்ஷன்களின் ஒரு சௌகரியமான சுருக்கம் என்று சொல்லலாம். இது குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் நீங்கள் செய்த கடந்த சில டிரான்ஸாக்ஷன்களை காண்பிக்கும். வழக்கமாக ஒரு மினி ஸ்டேட்மெண்டில் கடந்த 5 டிரான்ஸாக்ஷன்கள் டிஸ்ப்ளே செய்யப்படும். இதில் டெபாசிட்கள், வித்டிராயல்கள் மற்றும் பேலன்ஸ் அப்டேட்கள் போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.
மிஸ்டு கால் சேவை மூலமாக SBI மினி ஸ்டேட்மெண்ட் பெறுவது எப்படி?
முதலில் உங்களுடைய மொபைல் நம்பர் SBI அக்கவுண்ட் உடன் பதிவு செய்யப்பட்டிருப்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் இந்த சேவையை உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து உங்களால் பயன்படுத்த இயலும். உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 9223866666 என்ற எண்ணுக்கு போன் செய்யுங்கள். இந்த போன் கால் ஆட்டோமேட்டிக்காகவே டிஸ்கனெக்ட் செய்யப்படும். அந்த போன் காலுக்குப் பிறகு உங்களுடைய மினி ஸ்டேட்மெண்ட் விவரங்கள் அடங்கிய ஒரு SMS-ஐ பெறுவீர்கள். இந்த சேவை 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், மெசேஜ்களை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் உங்களிடம் போதிய பேலன்ஸ் இருக்க வேண்டும்.
Also Read: Gold Rate 6th Jan | தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! இன்றைய விலை நிலவரம் எவ்வளவு?
நெட் பேங்கிங் மூலம் SBI மினி ஸ்டேட்மெண்ட் பெறுவது எப்படி?
- ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.
- உங்களுடைய யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாகின் செய்யுங்கள்.
- இப்பொழுது அக்கவுண்ட் சம்மரி அல்லது அக்கவுண்ட்ஸ் பிரிவிற்கு செல்லுங்கள்.
- எந்த அக்கவுண்டுக்கு நீங்கள் மினி ஸ்டேட்மெண்டை பெற விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யுங்கள்.
- மினி ஸ்டேட்மெண்ட் அல்லது டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரி என்ற ஆப்ஷனை தேடுங்கள்.
- இங்கு உங்களுடைய கடந்த 5 டிரான்ஸாக்ஷன்களின் சுருக்கத்தை பார்க்க முடியும். தேவைப்பட்டால் ஸ்டேட்மெண்டை நீங்கள் டவுன்லோட் அல்லது பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்க: ஏடிஎம் வசதி மற்றும் மொபைல் ஆப்: EPFO 3.0 சிறப்பம்சங்கள்…!
YONO அப்ளிகேஷன் மூலமாக SBI மினி ஸ்டேட்மெண்ட் பெறுவது எப்படி?
- ஒருவேளை உங்களிடம் இந்த அப்ளிகேஷன் இல்லை என்றால் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு சென்று YONO அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- உங்களுடைய லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி அப்ளிகேஷனில் லாகின் செய்யவும்.
- மெயின் டேஷ் போர்டில் உள்ள அக்கௌன்ட் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- மினி ஸ்டேட்மெண்ட் தேவைப்படும் அக்கவுண்ட்டை தேர்வு செய்யவும்.
- கடந்த 5 டிரான்ஸாக்ஷன்களை தெரிந்து கொள்ள மினி ஸ்டேட்மெண்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
மெசேஜ் மூலமாக SBI மினி ஸ்டேட்மெண்ட்டை பெறுவது எப்படி?
- SMS மூலமாக மினி ஸ்டேட்மெண்ட்டை பெறுவதற்கு ‘MIS(space) Account Number’ என்று டைப் செய்து 9223866666 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்.
- இப்பொழுது உங்களுடைய கடந்த 5 டிரான்ஸாக்ஷன்களின் விவரங்கள் ஒரு மெசேஜாக அனுப்பி வைக்கப்படும்.
- மேலும் உங்களுடைய மொபைல் நம்பர் SBI அக்கவுண்டுடன் இணைத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்களுடைய மொபைல் திட்டத்தின் அடிப்படையில் இந்த SMS-க்கு கட்டணங்கள் பிடித்தம் செய்யப்படும்.
இதையும் படிக்க: PPF, NSC, SSY, KVP, போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்டுகள்: வட்டி விகிதங்கள் என்ன?
வாட்ஸ்அப் மூலமாக SBI மினி ஸ்டேட்மெண்ட்டை பெறுவது எப்படி?
- முதலில் 919022390229 என்ற SBI வாட்ஸ்அப் பேங்கிங் நம்பரை உங்களுடைய போன் காண்டாக்டில் சேமிக்கவும்.
- இப்போது வாட்ஸ்அப்பை திறந்து சேமித்த நம்பரில் ஒரு புதிய சேட்டை ஆரம்பிக்கவும்.
- அதில் ‘மினி ஸ்டேட்மெண்ட்’ என்று டைப் செய்து அனுப்பவும்.
- இப்பொழுது உங்களுடைய கடந்த 4 டிரான்ஸாக்ஷன் விவரங்கள் அடங்கிய ஒரு மெசேஜ் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்கப்படும்.
அடிக்கடி வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு வேறு எந்த அப்ளிகேஷனையும் திறக்காமலேயே டிரான்ஸாக்ஷன் விவரங்களை பெறுவதற்கு இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.
January 05, 2025 7:17 AM IST