நம்முடைய சேமிப்புப் பணத்தை முதலீடு செய்யலாம் என்று யோசிக்கும்போது நாம் அனைவருமே பாதுகாப்பான ஒரு இடத்தில்தான் நம்முடைய பணத்தை முதலீடு செய்ய முன் வருவோம். பெரும்பாலான நபர்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து விடுவார்கள். அந்த வகையில் குறைந்தபட்ச பதற்றத்தை ஏற்படுத்தி, நிலையான ரிட்டன்களை தரக்கூடிய முதலீட்டு ஆப்ஷன்களை பல முதலீட்டாளர்கள் இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அப்படி ஒரு நிலையான வருமான கருவியாக இருப்பது ஃபிக்சட் டெபாசிட்கள். வங்கிகள் தற்போது பொதுமக்களுக்கு ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமாக 8.1 சதவீதம் வரை வழங்கி வருகிறது. இது ஒட்டுமொத்த பண வீக்கத்தை சமாளிப்பதற்கு உதவுகிறது.
அனைத்து வங்கிகளுடன் ஒப்பிடுகையில், தற்போது RBL வங்கி அதிகபட்ச பிக்சட் டெபாசிட் விகிதமாக பொதுமக்களுக்கு ஒரு வருடத்திற்கு 3.5 சதவீதம் முதல் 8.1 சதவீதம் வரை வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 4 சதவீதம் முதல் 8.6 சதவீத வட்டியும் வழங்குகிறது. இந்த பதிவில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் ICICI வங்கி ஆகிய முன்னணி வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
இந்த நான்கு வங்கிகளில் தனியார் வங்கியான HDFC வங்கி 7.4 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதுவே ICICI வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி 7.25% வரையிலான வட்டி விகிதத்தை கொடுக்கிறது. அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு வருடத்திற்கு 7 சதவீத வட்டியை பொதுமக்களுக்கு வழங்குகிறது. இந்த பொருந்தக்கூடிய வட்டி விகிதங்கள் என்பது பணத்தை டெபாசிட் செய்யும் நபரின் வயது மற்றும் டெபாசிட் செய்யும் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.
ஒருவேளை சீனியர் சிட்டிசன்களாக இருந்தால் HDFC வங்கியில் 7.90% அதிக வட்டி கிடைக்கிறது. எனினும் ICICI வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை 7.80 சதவீதம் 7.75 சதவீதம் மற்றும் 7.50 சதவீதம் வட்டியை முறையே வழங்குகின்றன.
இதையும் படிக்க:
இந்தியாவின் 6 முன்னணி நகரங்களில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் முதலிடம் பிடித்த நகரம் எது தெரியுமா?
இந்த ஃபிக்சட் டெபாசிட் விகிதங்கள் அனைத்தும் 3 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு பொருந்தும். சிறப்பு இயக்கங்களை நடத்தி பொதுமக்களை அதிக டெபாசிட்களை செய்வதற்கு ஊக்குவிக்க கூறி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வாடிக்கையாளர் சேவையை திறம்பட வழங்குவதற்கு வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவை வளர்க்க வேண்டும் என்றும் அவர் வங்கிகளுக்கு ஆலோசனை கொடுத்துள்ளார். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அடுத்த மாதம் அதன் மானிட்டரி பாலிசி கமிட்டி மீட்டிங்கை நடத்துவதற்கான முடிவை எடுத்துள்ளது. இதில் ரெப்போ விகிதம் மாற்றப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.