Last Updated:

Shankar | திரைப்பட விமர்சனங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் திரைத்துறையில் நிலவி வரும் நிலையில், அது குறித்து இயக்குநர் ஷங்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

News18

திரைப்பட விமர்சனங்கள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில்,  அது குறித்து இயக்குநர் ஷங்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அண்மையில் நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் கார்த்திகைச் செல்வனுக்கு இயக்குநர் ஷங்கர் பேட்டியளித்திருந்தார். அதில் திரைப்பட விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சினிமா விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதிலும் ஏற்புடைய விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நான் எந்த விமர்சனங்களையும் பார்ப்பது கிடையாது. காரணம் அந்த விமர்சனங்கள் எனக்குள் ஒரு பிம்பத்தை உருவாக்கி விடுகின்றன. நன்றாக சொன்னாலும், தவறாக சொன்னாலும் சம்பந்தப்பட்ட படம் குறித்து எனக்குள் ஒரு பிம்பத்தை உருவாகிவிடுகிறது. அதனால் விமர்சனங்களை படித்துவிட்டு படம் பார்ப்பதில்லை.

படம் பார்த்துவிட்டு வேண்டுமானால் விமர்சனங்களை படிப்பேன். விமர்சனம் என்பது தனிப்பட்ட பார்வையாளர்களை சார்ந்தது. என்னுடைய நண்பர்கள் சிலர், நான் படத்தின் கதை கூறினாலும், அதை கேட்க மறுத்து தாங்களே நேரடியாக சென்று படம் பார்ப்பார்கள். நானும் அப்படித்தான் யாருடைய கருத்தும் கேட்காமல் நேரடியாக படம் பார்ப்பேன். அப்படி பார்ப்பது ஒரு தனி அனுபவம்” என்றார்.



Source link