இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும் இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆவது போட்டி டிராவில் முடிந்தது.

4 ஆவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 340 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 155 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜெய்ஸ்வால் 84 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் ஹேலியிடம் கேட்ச் கொடுத்தார். இதற்கு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அப்பீல் செய்தபோது, டிஆர்எஸ் முறை பின்பற்றப்பட்டது.

இதில் பந்து பேட்டில் பட்டதற்கான எந்தவொரு ஸ்பைக், தென்படவில்லை. இருப்பினும், ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக நடுவர் ஷர்புத்தோலா அவுட் கொடுத்தார். இந்த விவகாரம்  இணையத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து யார் இந்த ஷர்புத்தோலா என்று இணையத்தில் நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.

வங்கதேசத்தை சேர்ந்த இவர், அங்கு முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2000 மற்றும் 2001 க்கு இடையில் டாக்கா மெட்ரோபோலிஸ் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கிரிக்கெட்டில் அதிகம் ஜொலிக்க முடியாத அவர், நடுவர் பணியில் கவனம் செலுத்தினார். ஜனவரி 2010 இல், பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையேயான தனது முதல் சர்வதேச போட்டிக்கு நடுவராக இருந்தார்.

இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஐசிசி நடுவர்களின் எலைட் குழுவில் சேர்க்கப்பட்ட முதல் வங்கதேச நடுவராக மாறினார் ஷர்புத்தோலா.

இதையும் படிங்க – Yashasvi Jaiswal: ஜெய்ஸ்வால் அவுட்டா.. இல்லையா? – விமர்சனத்தை தாண்டி ஐசிசி விதி சொல்வது என்ன?

ஷர்பத்தோலா டாக்கா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் பட்டம் பெற்றவர். வங்கதேசத்தில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டியில் மனித வள மேலாண்மையில் எம்பிஏ படித்தார். இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அவுட் கொடுத்த நிகழ்வில் இந்தியா முழுவதும் அவர் பிரபலம் அடைந்துள்ளார்.





Source link