Last Updated:

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தில் சிம்பு பாடிய ‘ஏன்டி விட்டு போன’ பாடல் ப்ரோமோ வெளியானது. படம் பிப்ரவரி 21 வெளியீடு.

News18

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏன்டி விட்டு போன’ பாடலை சிம்பு பாடியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் லியோன் ஜேம்ஸ் இசை அமைப்பில் வெளியான, ‘ரைஸ் ஆஃப் தி டிராகன்’ மற்றும் ’வழித்துணையே’ பாடல்கள் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சிம்பு பாடியுள்ள “ஏன்டி விட்டு போன…” பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் இசை அமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் உடன் பாடல் குறித்து சிம்பு ஜாலியாக கலந்துரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சிம்பு பாடியுள்ள இப்பாடல் நாளை (ஜன.28) வெளியாகிறது. டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.





Source link