சிறகடிக்க ஆசை நேற்றைய எபிசோடில் மனோஜ் , விஜயா கோவிலில் தீச்சட்டி ஏந்திய விஷயம் வீட்டில் தெரிந்து அனைவரும் கிண்டல் செய்கின்றனர். பின் கடையில் வேலை செய்யும் நபர் வந்து உங்களுக்கு செய்வினை வைக்கவில்லை. தெரியாமல் பக்கத்து ஏடிஎமில் வேலை பார்க்கும் தாத்தா வைத்துவிட்டு போன முட்டைதான் என்று சொல்கிறார். இதை கேட்டும் அனைவரும் மேலும் கிண்டல் செய்து சிரிக்கின்றனர். அத்துடன் முடிகிறது.

இன்றைய எபிசோடில், மீனாவை ஃபாலோ செய்யும் முருகன் இன்றைக்கும் பூ கொடுக்கும் இடத்திற்கு வந்து பேசுகிறார். அப்போது முத்து சொல்லிக் கொடுத்தது போல் உங்க பேரை இனி சொல்ல வேண்டாம். நான் அன்புனு கூப்புடுறேன். நீங்க அவ்வளவு அன்பானவங்களா இருக்குறதால அப்படியே கூப்புடுறேன் என முத்து சொல்லிக்கொடுத்த வசனங்களை மாறாமல் சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார். இதனால் கடுப்பாகும் மீனா முத்துவுக்கு ஃபோன் செய்து என்னை ஒருவன் ஃபாலோ செய்கிறான் என்று சொல்ல முத்து கோபப்பட்டு யாரது எவ்வளவு தைரியம், முன்னாடியே ஏன் சொல்லல என்று கேட்கிறார். அடுத்தமுறை வந்தா என்கிட்ட சொல்லு என திட்டுகிறார்.

விளம்பரம்

வீட்டில் ஸ்ருதி டப்பிங் கொடுக்கும் ஹீரோயினுக்கு பிறந்தநாளுக்கு ரவியையும் கூப்பிடுகிறார். ரவியும் வருகிறேன் என வாக்குறுதி கொடுக்கிறார். அந்தசமயத்தில் ரவியின் பாஸ் நீத்து ஃபோன் செய்து ஈவ்னிங் முக்கிய ஆர்டர் வந்துடுங்க என்று சொல்கிறார். பின் ரவி ஸ்ருதியிடம் ஃபங்ஷன் வர முடியாது முக்கியமான வேலை வந்துடுச்சு என்று சொல்கிறார். இதனால் ஸ்ருதி கோபப்படுகிறார்.

News18

பின் ஸ்ருதி தனியாகவே அந்த ஃபங்ஷனை அட்டண்ட் செய்கிறார். அங்கு எதிர்பாராத விதமாக ரவியும் வருகிறார். கூடவே நீத்துவும் இருக்கிறார். இதை பார்த்து கோபப்படும் ஸ்ருதி நான் கூப்பிடும்போது வரல அவ கூட வந்திருக்க என்று சண்டை போடுகிறார். உடனே ரவி, இங்கதான் எனக்கு ஃபுட் ஆர்டர் வந்துச்சு. நீத்து பிசினஸுக்கு புதுசுனு என்னை கூட்டிட்டு வந்தாங்க என்கிறார். அவ கூப்பிட்டா வருவ.. நான் கூப்பிட்டா வர மாட்டல என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்.

விளம்பரம்

Also Read |
Siragadikka Aasai | மனோஜுக்கு செய்வினை வைத்தது இவரா..? வீடியோவால் வீட்டில் சலசலப்பு..!

மீனா பார்வதி வீட்டிற்கு பூ கொடுக்க செல்கிறார். அப்போது பார்வது ரோகிணிக்கு உன் மேல எவ்வளவு பாசம் தெரியுமா.. நீ கெட்ட பேரு வாங்க கூடதுனு கழுத்துல இருந்த தாலியை அடமானம் வெச்சு 2 லட்சம் கொடுத்தா என்று சொல்கிறார். இதை கேட்டதும் மீனாவால் நம்ப முடியவில்லை. இதற்கு பின் ஏதாவது காரணம் இருக்கும் என்று யோசிக்கிறார். அத்துடன் எபிசோட் நிறைவடைகிறது.

விளம்பரம்
இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் 5 சூப்பர்ஃபுட்கள்.!


இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் 5 சூப்பர்ஃபுட்கள்.!

நாளைய எபிசோட் புரோமோவில் விஜயா தலையில் மாவு கொட்டியபோது ஸ்ருதி அதைஃ போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தார். அதை பில்லி சூனிய ம் விரட்டும் பேய் போல் சித்தரித்து ஒருவர் சக்தி வாய்ந்த ஃபோட்டோ என்று சொல்லி மனோஜ் கடையில் விற்கப்பார்கிறார். அந்த ஃபோட்டோவை பாக்கும் ரோகிணி இது அத்தை மாதிரி இருக்கு என்கிறார். அத்துடன் முடிகிறது.

.



Source link