Last Updated:
புதிய Redmi 14C என்ற 5ஜி மொபைலை 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் , 4GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம்+ 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என மொத்தம் 3 வேரியன்ட்ஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Xiaomi நிறுவனத்தின் சப்-பிராண்டான ரெட்மி, சமீபத்தில் இந்தியாவில் Redmi 14C என்ற 5ஜி மொபைலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய 5G ஸ்மார்ட்ஃபோன் கிளாஸ் பேக்குடன் மூன்று கலர் ஆப்ஷன்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் Redmi 14C 5G மொபைலின் விலை:
புதிய Redmi 14C என்ற 5ஜி மொபைலை 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் , 4GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம்+ 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என மொத்தம் 3 வேரியன்ட்ஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.9,999, ரூ.10,999 மற்றும் ரூ.11,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஸ்டார்லைட் ப்ளூ, ஸ்டார்டஸ்ட் பர்பிள் மற்றும் ஸ்டார்கேஸ் பிளாக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த புதிய மொபைல் Amazon, Flipkart, Mi.com மற்றும் Xiaomi ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலம் ஜனவரி 10ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு விற்பனைக்கு வர உள்ளது.
Redmi 14C 5G மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள்:
இந்த மொபைலில் 120Hz ரெசல்யூஷனுடன் கூடிய 6.88-இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இந்த டூயல் சிம் மொபைலானது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HyperOS-ல் இயங்குகிறது. இந்த மொபைலுக்கு இரண்டு முக்கிய OS அப்டேட்ஸ்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ்கள் வழங்கப்படும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது. இந்த மொபைலின் டிஸ்ப்ளே ப்ளூ லைட்எமிஷனுக்கான TÜV ரைன்லேன்ட் சான்றிதழ், TÜV ரைன்லேன்ட் ஃப்ளிக்கர் இலவச சான்றிதழ் மற்றும் சர்க்காடியன் சான்றிதழைக் கொண்டுள்ளது.
இந்த மொபைலின் டிஸ்ப்ளே 600 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 240Hz டச் சேம்ப்ளிங் ரேட்டைக் கொண்டுள்ளது. இது 4nm ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC (Snapdragon 4 Gen 2) ப்ராசஸரைக் கொண்டுள்ளது. இது 6GB வரையிலான LPDDR4X RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை பயன்படுத்தி ரேம் கெப்பாசிட்டியை கிட்டத்தட்ட 12 ஜிபி வரை விரிவாக்கிக் கொள்ள முடியும்.
இதையும் படிக்க: போன் அழைப்புகளுக்கு பதிலளிக்க வெறுப்பா இருக்கா…? இனி உங்களுக்கு பதில் பிக்ஸல் போன் பதிலளிக்கும்…!
ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு இந்த மொபைலானது f/1.8 aperture கொண்ட 50MP பிரைமரி கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா சிஸ்டமைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த மொபைல் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP52 ரேட்டிங்கைக் கொண்டுள்ளது. மைக்ரோ SD கார்டு ஸ்லாட் மூலம் 1TB வரை ஸ்டோரேஜை விரிவாக்கிக் கொள்ளலாம். இதில் இருக்கும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் ப்ளூடூத், ஜிபிஎஸ், கலிலியோ, பெய்டோ, வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.
இதையும் படிக்க: 2025ஆம் ஆண்டில் ரூ.10,000க்குள் வாங்கக்கூடிய 5 சிறந்த சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்கள்..!
இந்த மொபைல் 5,160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இந்த ஃபோனுடன் சேர்த்து ரூ.1,999 மதிப்புள்ள 33W இன்பாக்ஸ் சார்ஜர் வருகிறது. இந்த பேட்டரி 21 நாட்கள் வரை ஸ்டான்ட்-பை டைமிங்கையும், ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 139 மணிநேர மியூசிக் ப்ளேபேக் டைமிங்க்கையும் வழங்குவதாக கூறப்படுகிறது.
January 07, 2025 2:23 PM IST