பிரபல ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான ஒன்பிளஸ் சமீபத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது ஃபிளாக்ஷிப் மொபைலான OnePlus 13-ஐ சீனாவில் வெளியிட்டுள்ளது. சமீபத்திய Qualcomm Snapdragon 8 Elite ப்ராசஸர் இடம்பெறும் முதல் டிவைஸ்களில் இதுவும் ஒன்றாகும். இது தொடர்பான முழு விவரங்களை இங்கே பார்ப்போம்.
இந்த மொபைலில் 6,000mAh பேட்டரி உள்ளது. சீனாவில் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த மொபைல் அடுத்த ஆண்டு அதாவது 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13 விலை
ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 13 மொபைலை மொத்தம் நான்கு வேரியன்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் ஒயிட், அப்சிடியன் மற்றும் ப்ளூ உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
12GB + 256GB வேரியன்ட்டின் விலை CNY 4,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,100)
-
12GB + 512GB வேரியன்ட்டின் விலை CNY 4,899 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.57,900)
-
16GB + 512GB வேரியன்ட்டின் விலை CNY 5,299 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.62,600)
-
24GB + 1TB வேரியன்ட்டின் விலை – CNY 5,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.70,900)
Also Read:
உங்கள் ஆதாரை யாராவது தவறாக பயன்படுத்துகிறார்களா..? கண்டுபிடிப்பது எப்படி? – முழு விவரம் இதோ!
ஒன்பிளஸ் 13 மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள்
ஒன்பிளஸ் 13 மொபைலானது ஒரு குவாட்-கர்வ் டிசைனை கொண்டுள்ளது. இது 6.82-இன்ச் BOE X2 2K+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 1440p ரெசல்யூஷனுடன் கூடிய 8T LTPO பேனல் மற்றும் 1-120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளேவின் பீக் பிரைட்னஸ் 4,500 nits-ஆக உள்ளது. அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனரும் இதில் உள்ளது. இதிலிருக்கும் ஒரு தனித்துவ அம்சம் என்னவென்றார் புதிய வைப்ரேஷன் மோட்டார் ஆகும். இது “கேமிங் கன்ட்ரோலர் லெவல் ஃபீட்பேக் ” வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு டிவைஸில் இதுவரை அளிக்கப்படாத ஒன்றாகும். ஒன்பிளஸ் நிறுவனம் இந்த மொபைலை IP69 ரேட்டிங்குடன் அறிமுகம் செய்துள்ளது.
OnePlus 13 மொபைலின் பின்புறம் மூன்று ஹாசல்பிளாட்-பிராண்டட் 50MP கேமராக்கள் உள்ளன. இதில் OIS மற்றும் 8K ரெக்கார்டிங் சப்போர்ட்டுடன் கூடிய 50MP Sony LYT-808 பிரைமரி கேமரா சென்சார், 3X ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைட் ஆங்கிள் கேமரா அடங்கும். செல்ஃபிக்களுக்காக இதன் முன்பக்கத்தில் 32MP கேமரா உள்ளது.
சீன வெர்ஷனில் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ColorOS 15-ல் இயங்கும் இந்த மொபைல், சர்வதேச வெர்ஷன்களில் OxygenOS 15 இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மொபைல் 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 6,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியில் இயங்குகிறது.
.